குடும்பத்துக்கு கொலை மிரட்டல் - ட்விட்டரில் இருந்து வெளியேறிய அனுராக் காஷ்யப்

Anurag Kashyap Leaves Twitter | அனுராக் காஷ்யப் ட்விட்டரிலிருந்து வெளியேறியது இந்திய அளவில் ட்ரெண்டாகி விவாதப் பொருளாகியுள்ளது.

news18
Updated: August 11, 2019, 12:58 PM IST
குடும்பத்துக்கு கொலை மிரட்டல் - ட்விட்டரில் இருந்து வெளியேறிய அனுராக் காஷ்யப்
பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப்
news18
Updated: August 11, 2019, 12:58 PM IST
தனக்கும், தன்னுடைய குடும்பத்தினருக்கும் கொலைமிரட்டல் வருவதால் ட்விட்டரில் இருந்து விலகுவதாக அனுராக் காஷ்யப் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. அதற்கு ஏராளமான திரைத்துறை பிரபலங்கள் சமூகவலைதளங்களில் வாழ்த்துச் செய்தியை பதிவிட்டனர்.

அப்போது பிரபல இயக்குநரும், நடிகருமான அனுராக் காஷ்யப், “மோடி சார். உங்களது வெற்றிக்கு வாழ்த்துகள். ஆனால் உங்களின் எதிர்ப்பாளனாகிய எனது மகளை உங்களது தொண்டர்கள் வெற்றியைக் கொண்டாடுகிறோம் என்ற நோக்கத்தில் மிரட்டியுள்ளனர். அவர்களை எப்படி சமாளிப்பது என்று சொல்லிக் கொடுங்கள்” என்று கூறியிருந்தார்.


அனுராக் காஷ்யப்பின் இந்தப் பதிவுக்கு பதிலளித்த, தி ஆக்‌ஷிடென்டல் பிரைம் மினிஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளர் அசோக் பண்டிட், “இந்தச் செய்தி போலியானது. நாடே மோடியின் வெற்றியைக் கொண்டாடு வரும் நிலையில் அவர் மீது அவதூறு ஏற்படுத்துவதற்காக போட்டோ ஷாப் மூலம் இதை அர்பன் நக்ஸல்ஸ் செய்துள்ளனர். எனக்கு இதே சூழ்நிலை வந்தபோது நான் காவல்துறையில் புகார் அளித்தேன்” என்று கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்து சமூக வலைதளத்தில் இந்தவிவாதம் வலுத்தது. இதனால் அனுராக் காஷ்யப் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் ட்விட்டரிலிருந்து வெளியேறியுள்ளார்.Loading...

இதுகுறித்த ட்விட்டர் பதிவில், இது எனது கடைசி ட்வீட். இதிலிருந்து விலகுகிறேன். பயமில்லாமல் எனது மனதில் உள்ளதை பேச அனுமதிக்கப்படாத போது, நான் பேசாமலேயே இருக்கலாம். உங்களது பெற்றோருக்கு போனில் கொலை மிரட்டலும் மகளுக்கு ஆன்லைனில் மிரட்டலும் வரும்போது யாரும் பேச விரும்பமாட்டார்கள் என்பது தெரியும். குண்டர்கள் ஆட்சிக்கு வரும்போது வன்முறைதான் வாழ்க்கை முறையாக இருக்கும். இந்த புதிய இந்தியாவில் அனைவருக்கும் வாழ்த்துகள். நீங்கள் செழித்து வளர்வீர்கள் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.அனுராக் காஷ்யப் ட்விட்டரிலிருந்து வெளியேறியது இந்திய அளவில் ட்ரெண்டாகி விவாதப் பொருளாகியுள்ளது. நயன்தாரா  நடித்த இமைக்கா நொடிகள் படத்தில் அனுராக் வில்லனாக நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

வீடியோ பார்க்க: ஜெயலலிதாவை மனதில் வைத்து பெண்ணாக நடித்தேன் - நடிகர் ஆனந்தராஜ்

First published: August 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...