முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / என்ன இப்படி சொல்லிட்டாரு?! மோகன்.ஜியின் 'பகாசூரன்' குறித்து பாலிவுட் இயக்குநர் கமெண்ட்

என்ன இப்படி சொல்லிட்டாரு?! மோகன்.ஜியின் 'பகாசூரன்' குறித்து பாலிவுட் இயக்குநர் கமெண்ட்

செல்வராகவன்

செல்வராகவன்

அவரது கேங் ஆஃப் வாசிப்பூர் படங்களுக்கு சசிக்குமாரின் சுப்ரமணியபுரம் தான் இன்ஸ்பிரேஷன் என்று குறிப்பிட்டிருக்கிறார். அனுராக்கின் ஆரம்பகால படங்களுக்கு நட்டி தான் ஒளிப்பதிவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மோகன்.ஜி. அடுத்ததாக இவர் இயக்கத்தில் வெளியான திரௌபதி, ருத்ர தாண்டவம் படங்கள் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தின.

இதனையடுத்து செல்வராகவன் , நட்டி உள்ளிட்டோர் நடிப்பில் மோகன்.ஜி இயக்கிய பகாசூரன் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது.

படம் பார்த்தவர்கள் பகாசூரன் படத்தை பாராட்டியும், கடுமையாக விமர்சித்தும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் தனது ட்விட்டர் பக்கத்தில், தென்னிந்திய அளவில் பகாசூரன் படத்தைப் பற்றி நல்ல வார்த்தைகளை கேள்விப்படுகிறேன். என்னுடய நண்பர் நட்டிக்கும், இயக்குநர் செல்வராகவனுக்கும் வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் படங்கள் குறித்து இயக்குநர் அனுராக் குறித்து பெருமையாக பேசிவருகிறார். அவரது கேங் ஆஃப் வாசிப்பூர் படங்களுக்கு சசிக்குமாரின் சுப்ரமணியபுரம் தான் இன்ஸ்பிரேஷன் என்று குறிப்பிட்டிருக்கிறார். அனுராக்கின் ஆரம்பகால படங்களுக்கு நட்டி தான் ஒளிப்பதிவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Director selvaragavan