பும்ராவுடன் காதலா? - நடிகை அனுபமா பதில்!

பும்ராவுடன் காதலா? - நடிகை அனுபமா பதில்!
நடிகை அனுபமா
  • News18
  • Last Updated: June 13, 2019, 2:41 PM IST
  • Share this:
பும்ராவை காதலிப்பதாக வெளியான தகவல் குறித்து பதிலளித்துள்ளார் நடிகை அனுபமா.

யாக்கர் மன்னன் என்றழைக்கப்படும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக பந்துவீசி வருகிறார். இந்திய அணிக்கு தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர் இல்லாமல் இருந்த குறையை பும்ரா போக்கியுள்ளார் என்றே சொல்லாம். ஐசிசி பவுலர்கள் தரவரிசைப் பட்டியலில் பும்ரா தான் முதலிடத்தில் இருக்கிறார்.

இவருக்கும் பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை அனுபாமாவிற்கும் காதல் மலர்ந்துள்ளதாக கிசுகிசுப்பட்டது.
இதற்கு காரணம் ட்விட்டரில் பும்ரா ஃபாலோ செய்யும் 25 பேர்களில் பெரும்பாலானோர்  கிரிக்கெட் வீரர்கள். மற்றவை கிரிக்கெட் தொடர்புடைய பக்கம். அவர் ஃபாலோ செய்யும் ஒரே நடிகை அனுபாமா தான். அனுபாமாவும் தனது ட்விட்டரில் பும்ராவை ஃபாலோ செய்கிறார்.

மேலும் அவர் போடும் ஒவ்வொரு பதிவிற்கும் லைக் செய்து, அதை ஷேர் செய்து வருகிறார்.இந்நிலையில் இருவருக்குமான காதல் கிசுகிசு குறித்து பேட்டியளித்திருக்கும் அனுபமா, தாங்கள் இருவரும் காதலிக்கவில்லை என்றும், இருவரும் நல்ல நண்பர்களாக நட்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பார்க்க: ஹாப்பி பர்த்டே திஷா பதானி... ஸ்பெஷல் புகைப்படங்கள்...!வீடியோ: கம்பேக் நாயகர்கள்... அஜித், விஜய் வளர்ந்த கதை!

First published: June 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading