Anupama Parameswaran: 'நான் ஒருவரை காதலித்தேன்’ மனம் திறந்த அனுபமா பரமேஸ்வரன்!

அனுபமா பரமேஸ்வரன்

பிரேமம் படத்தில் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். குறுகிய காலத்தில் தமிழ், கன்னடம், தெலுங்குப் படங்களிலும் நடித்தார்.

  • Share this:
    அனுபமா பரமேஸ்வரனுக்கும் காதலுக்கும் எட்டாம் பொருத்தம். யாருடன் நடித்தாலும் அவருடன் அனுபமாவின் பெயர் கிசுகிசுக்கப்படும். சினிமாவைத் தாண்டி கிரிக்கெட் வீரர் பும்ராவுடன் இவர் பெயர் கிசுகிசுக்கப்பட்டது நினைவிருக்கலாம். சமீபத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தவர், தனது காதல் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

    பிரேமம் படத்தில் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். குறுகிய காலத்தில் தமிழ், கன்னடம், தெலுங்குப் படங்களிலும் நடித்தார். இன்றைய தேதியில் தெலுங்குப் படங்களுக்கே முன்னுரிமை அளித்து நடித்து வருகிறார். தமிழில் தள்ளிப்போகாதே படத்தில் நடித்திருக்கிறார். இது அதர்வா நடிப்பில் ஆர்.கண்ணன் இயக்கியது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    சமீபத்தில் 18 பேஜஸ் என்ற தெலுங்குப் படத்தில் கமிட்டானார். நாயகன் நிகில் சித்தார்த். அனுபமாவின் ராசிப்படி அவருடனும் காதல் என கிசுகிசுக்கப்பட்டார். இந்நிலையில், நீங்கள் காதலித்திருக்கிறீர்களா என்ற ரசிகரின் கேள்விக்கு பதிலளித்தவர், "ஆம், நான் ஒருவரை உண்மையாக காதலித்தேன், ஆனால் அந்தக் காதல் விரைவில் முடிவுக்கு வந்தது" என பதிலளித்துள்ளார். அந்த காதலர் பும்ராவா என்பதை அனுபமா கூறவில்லை.

    அதேநேரம், அனுபமாவும், பும்ராவும் காதலிக்கவில்லை என அனுபமாவின் குடும்பத்தார் சார்பில் மறுப்பு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: