ரெளடி பாய்ஸ் திரைப்படத்தின் முத்தக்காட்சிக்குப் பிறகு தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தியிருக்கிறார் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.
அனுபமா பரமேஸ்வரன் மற்றும் ஆஷிஷ் ரெட் நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொங்கலை முன்னிட்டு வெளியாகிய படம் ரெளடி பாய்ஸ். வெளியான தினத்திலிருந்து சினிமா காதலர்களின் மனதை வெகுவாக கொள்ளையடித்து வருகிறது. ஹர்ஷா கோனுகாண்டி இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தை தில் ராஜு மற்றும் ஷிரிஷ் இணைந்து தயாரித்துள்ளனர்.
இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் இளம்
நடிகர் ஆஷிஷ் ரெட்டி தயாரிப்பாளர் தில் ராஜுவின் மருமகன் (சகோதைரின் மகன்). ரவுடி பாய்ஸ் படத்தில் சாஹிதேவ் விக்ரம், கார்த்திக் ரத்தினம், தேஜ் குரபதி மற்றும் கோமலி பிரசாத் ஆகியோரும் நடித்துள்ளனர். படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, மதி ஒளிப்பதிவு செய்துள்ளார். ரவுடி பாய்ஸ் படத்தில் ஆஷிஷ் ரெட்டியுடன் முத்தக் காட்சியில் நடித்து தலைப்பு செய்தியாக மாறினார் அனுபமா பரமேஸ்வரன்.
உங்கள் கண்கள் செமயா இருக்கு... பிக் பாஸ் ராஜுவை பாராட்டிய விஜய்!
அந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க அவர் 50 லட்சம் சம்பளமாக வாங்கியதாக என்பது
சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. அறிமுக நடிகர் ஆஷிஷ் ரெட்டியுடனான முத்தக்காட்சி சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியது.
வருங்கால மனைவியுடன் குக் வித் கோமாளி புகழ்? வலம் வரும் புகைப்படம்!
இதற்கு முன்பு குடும்பப் பாங்கான படங்களில் குறைவான
சம்பளம் வாங்கிய அனுபமா, இந்தப் படத்தில் முத்தக் காட்சியில் நடிப்பதற்காக சம்பளத்தை 50 லட்சமாக உயர்த்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தவிர அவர் அப்படி நடித்தது சிலரை முகம் சுழிக்கவும் வைத்தது. எது எப்படியோ இதன் மூலம் அனுபமாவின் மார்க்கெட் தெலுங்கில் உயர்ந்திருக்கிறது, அது போதும் என்கிறார்கள் ரசிகர்கள்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.