கிரிக்கெட் வீரர் பும்ராவை அனுபமா பரமேஸ்வரன் மணந்துக் கொள்வதாக வரும் செய்திகளில் உண்மையில்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரித் பும்ரா சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவர். கடந்த சில ஆண்டுகளாக தனது நடிப்பால் மக்களைக் கவர்ந்த அனுபமா பரமேஸ்வரனை அவர் காதலிப்பதாக செய்திகள் வலம் வந்தன. அகமதாபாத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்டில் இருந்து பும்ரா ஓய்வு எடுத்துள்ளார். தொடரிலிருந்து ஓய்வு பெற தனிப்பட்ட காரணங்களை அவர் மேற்கோள் காட்டினார்.
Selvaraghavan: நடிகராக முதல் பிறந்தநாள் – வைரலாகும் செல்வராகவன் படம்!
இருப்பினும் அவர் அனுபமாவை திருமணம் செய்து கொள்வதற்காக ஓய்வு எடுத்திருப்பதாக வதந்திகள் வலம் வருகின்றன. அதே நேரத்தில் த்வாரகாவுக்குப் பயணம் செய்யும் செய்தியை பகிர்ந்து கொண்டார் அனுபமா. இது அவர்களின் திருமணம் குறித்த வதந்தியை இன்னும் தீவிரமாக்கியது. தற்போது இதனை அனுபாமாவின் குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.
படப்பிடிப்பில் இருக்கும் அனுபமா படப்பிடிப்புக்காக வெவ்வேறு நகரங்களுக்கு சென்று வருகிறார். இந்நிலையில் ஜஸ்பிரித் பும்ராவை அவர் திருமணம் செய்துக் கொள்ளும் செய்தியை அனுபாமாவின் குடும்பத்தினர் மறுத்துள்ளனர். மலையாள வலைத்தளத்துடன் பேசிய அவரது குடும்பத்தினர், அனுபமா பும்ராவை திருமணம் செய்து கொள்ளும் செய்தி வெறும் வதந்தி எனவும், படப்பிடிப்புக்காக அனுபமா குஜராத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
அனுபமா தற்போது அதர்வா நடிக்கும் தள்ளிப் போகாதே படப்பிடிப்பில் இருக்கிறார். இதனை இயக்குநர் கண்ணன் இயக்குவது குறிப்பிடத்தக்கது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்