தனிப்பட்ட காரணங்களுக்காக இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா பிசிசிஐ-யிடம் விடுப்பு கேட்டிருந்தார். இதையடுத்து அவருக்கு விடுப்பு அளிக்கப்பட்டது. அடுத்து நடைபெறவுள்ள டி2ஒ தொடரிலும் அவர் இடம்பெறவில்லை .
பும்ரா விடுப்பு எடுத்திருக்கும் அதேவேளையில் அவருடன் காதலில் கிசுகிசுக்கப்படும் நடிகை அனுபமா பரமேஸ்வரனும் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “எனக்கு மகிழ்ச்சியான விடுமுறை” என்று பதிவிட்டிருந்தார்.
இதனால் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக பேச்சு அடிபட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்து பேட்டியளித்திருக்கும் அனுபமாவின் தாயார், “இன்ஸ்டாகிராமில் அனுபமா -பும்ரா இருவரும் ஒருவரையொருவர் ஃபாலோ செய்வதை பிடிக்காதவர்கள் தான் இருவரையும் சேர்த்து தவறான தகவலை வெளியிடுகிறார்கள். எல்லோரும் மறந்திருக்கும் போது புதிய கதை ஒன்று வெளியாகும். இதை நாங்கள் பாசிட்டிவ்வாகவே பார்க்கிறோம். இதற்கு முன்னர் கூட அனுபமாவை பும்ராவுடன் இணைத்து பேசினார்கள். பின்னர் ஒருவரையொருவர் இன்ஸ்டாகிராமில் பின் தொடர்வதை நிறுத்திவிட்டார்கள் என எண்ணுகிறேன்.
ஒருமுறை விடுதி ஒன்றில் அனுபமா ஷூட்டிங்கில் இருந்தார். அப்போது அதே விடுதியில் பும்ராவும் தங்கினார். அப்போது தான் இருவரும் ஒருவரையொருவர் சந்தித்தார்கள். இப்போது இருவரைப்பற்றியும் ஏன் செய்திகள் வெளிவருகின்றன என்பது எனக்கு புரியாத புதிராக இருக்கிறது. தற்போது படப்பிடிப்புக்காகவே அனுபமா ராஜ்கோட்டுக்கு அனுபமா சென்றிருக்கிறார். எந்த விதமான வதந்தி பரப்பினாலும் அதை நாங்கள் வேடிக்கையாகவே பார்க்கிறோம்” என்று கூறியுள்ளார்.
Published by:Sheik Hanifah
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.