பிரபல நடிகர் அனுபம்கேரின் தாயார் உட்பட குடும்பத்தினருக்கு கொரோனா பாசிட்டிவ் - பாலிவுட்டில் அதிர்ச்சி

பாலிவுட் நடிகர் அனுபம் கேரின் தாயார் துலாரிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரபல நடிகர் அனுபம்கேரின் தாயார் உட்பட குடும்பத்தினருக்கு கொரோனா பாசிட்டிவ் - பாலிவுட்டில் அதிர்ச்சி
தாயார் உடன் அனுபம் கேர்
  • Share this:
பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் அமிதாப் பச்சன் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதை இருவரும் தங்களது சமூகவலைதள பதிவின் மூலம் உறுதிப்படுத்தினர்.

அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பதிவில், நான் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். எனது குடும்பத்தினர், பணியாளர்களிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வர வேண்டி உள்ளன. என்னை கடந்த 10 நாட்களில் சந்தித்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியிருந்தார்.

அமிதாப் பச்சனை அடுத்து பாலிவுட் நடிகர் அனுபம் கேரின் தாயாருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை நடிகர் அனுபம் கேர் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.


தனது தாயாருக்கு லேசான அறிகுறியுடன் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், கோகிலா பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தனது சகோதரர், உறவினருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள அவர், தனக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று இல்லை என முடிவு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகை ரேகாவின் இல்ல பாதுகாவலர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து ரேகாவின் பங்களா முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளது. பாலிவுட் நட்சத்திரங்களின் குடும்பத்தினருக்கு அடுத்தடுத்து கொரோனாவால் பாதிக்கப்படுவது பாலிவுட் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
First published: July 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading