Home /News /entertainment /

நயன்தாராவின் கனெக்ட் திரையரங்கில் வெளியாகும் - சூசகமாக அறிவித்த அனுபம் கேர்

நயன்தாராவின் கனெக்ட் திரையரங்கில் வெளியாகும் - சூசகமாக அறிவித்த அனுபம் கேர்

கனெக்ட்

கனெக்ட்

நெற்றிக்கண் போல கனெக்டையும் ஓடிடி பக்கம் தள்ளிவிடுவார்கள் என்றே அனைவரும் நினைத்திருந்தனர். அனுபம் கேரின் ஸ்டேட்மெண்ட் அதனை மாற்றியிருக்கிறது. கனெக்ட் அவர் நடிக்கும் 522 வது படமாம். கனெக்டில் நடிப்பதற்காக நயன்தாரா, விக்னேஷ் சிவன், அஸ்வின் சரவணன் ஆகியோருக்கு நன்றி கூறியிருப்பவர், திரையரங்கில் சந்திப்போம் என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • Last Updated :
நெற்றிக்கண் படத்தைத் தொடர்ந்து நயநன்தாரா தயாரித்து நடிக்கும் படம் கனெக்ட். இந்தப் படம் திரையிரங்கில் வெளியாகும் என படத்தில் நடிக்கும் அனுபம் கேர் சூசகமாக தெரிவித்துள்ளார்.

சின்ன பட்ஜெட்டில் ஹாரர், த்ரில்லர் படங்களை எடுத்து தங்களது பிரபலத்தை வைத்து ஓடிடி தளங்களுக்கு படத்தை தள்ளிவிடுவதை சிலர் தொழிலாகவே வைத்திருக்கிறார்கள். படம் பெரிய வரவேற்பைப் பெறாவிட்டாலும் தயாரித்தவர்களுக்கு லம்பாக லாபம் கிடைக்கும். நெற்றிக்கண் படம் பெரிதாக யாரையும் கவரவில்லை. ஆனால், டிஸ்னி-ஹாட்ஸ்டார் படத்தை விற்றதால் படத்தை தயாரித்த நயன்தாரா, விக்னேஷ்சிவனுக்கு பல கோடிகள் லாபம். இதுவே திரையரங்கில் வெளியாகியிருந்தால் நஷ்டத்திலிருந்து தப்பிப்பதே பெரும் பாடாகியிருக்கும்.

நெற்றிக்கண் போலவே கனெக்ட் படம் தயாராகி வருகிறது. நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் படத்தை தயாரிக்க, முதன்மை வேடத்தில் நயன்தாரா, உடன் சத்யராஜ், அனுபம் கேர் நடிக்கின்றனர். மாயா, கேம் ஓவர் படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கம்.

Also read... ஜாக்கிசானை வைத்து அந்நியன் ரீமேக் - தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன்!

நெற்றிக்கண் போல கனெக்டையும் ஓடிடி பக்கம் தள்ளிவிடுவார்கள் என்றே அனைவரும் நினைத்திருந்தனர். அனுபம் கேரின் ஸ்டேட்மெண்ட் அதனை மாற்றியிருக்கிறது. கனெக்ட் அவர் நடிக்கும் 522 வது படமாம். கனெக்டில் நடிப்பதற்காக நயன்தாரா, விக்னேஷ் சிவன், அஸ்வின் சரவணன் ஆகியோருக்கு நன்றி கூறியிருப்பவர், திரையரங்கில் சந்திப்போம் என தெரிவித்துள்ளார். அதாவது கனெக்ட் ஓடிடியில் வெளியாகாது, திரையரங்கில் வெளியாகும் என்கிறார்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Nayanthara

அடுத்த செய்தி