தளபதி 64: விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்

சமீபகாலமாக தமிழ்சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு பாலிவுட் நடிகர்கள் வில்லனாக நடித்துவரும் நிலையில், விஜய்க்கு மலையாள நடிகர் ஒருவர் வில்லனாக உள்ளார்.

news18
Updated: July 30, 2019, 8:22 PM IST
தளபதி 64: விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்
விஜய்
news18
Updated: July 30, 2019, 8:22 PM IST
‘தளபதி 64’ படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்கும் நடிகர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து 3-வது முறையாக அட்லீ இயக்கத்தில் பிகில் படத்தில் நடித்து வருகிறார் விஜய். பெண்கள் காலபந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் பயிற்சியாளராக நடிக்கிறார் விஜய். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகும் இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்தப் படத்தை அடுத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார் விஜய். இதற்காக நடிகர் விஜய் 120 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க மலையாள நடிகர் அந்தோணி வர்கீஸ் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.Loading...

 
View this post on Instagram
 

Chennai calling....... I am waiting.....


A post shared by antony varghese (@antony_varghese_pepe) on


சமீபகாலமாக தமிழ்சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு பாலிவுட் நடிகர்கள் வில்லனாக நடித்துவரும் நிலையில், விஜய்க்கு மலையாள நடிகர் ஒருவர் வில்லனாக உள்ளார்.

பிகில் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் நிலையில் விஜய்யின் 64-வது படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய பிலோமின் ராஜ் படத்தொகுப்பாளராக பணியாற்றவுள்ளார்.

வீடியோ பார்க்க: விஜய்யுடன் மோதும் தனுஷ்!

First published: July 30, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...