Home /News /entertainment /

ஓடிடியில் வெளியாகும் நானி - நஸ்ரியாவின் அடடே சுந்தரா படம்

ஓடிடியில் வெளியாகும் நானி - நஸ்ரியாவின் அடடே சுந்தரா படம்

அடடே சுந்தரா

அடடே சுந்தரா

தமிழ், தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் இந்த படம் கடந்த மாதம் 10 தேதி வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. தமிழில் இந்த படத்திற்கு அடடே சுந்தரா என்றும் பெயர் வைத்துள்ளனர்.

  • News18
  • Last Updated :
    நானி, நஸ்ரியா நடிப்பில் தமிழ், தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள அடடே சுந்தரா படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவித்துள்ளனர்.

    தமிழ் சினிமாவிற்கு 'நேரம்' படம் மூலமாக அறிமுகமானவர் நஸ்ரியா. பிறகு சில படங்களில் நடித்த நஸ்ரியா ஃபகத் ஃபாசிலை திருணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்பு சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்த நஸ்ரியா 2018-ல் பிரித்விராஜ் நடிப்பில் மலையாளத்தில் வெளியான 'கூடே' படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார்.

    இதனை தொடர்ந்து தெலுங்கில் நானி நடிப்பில் உருவாகியுள்ள 'அன்டி சுந்தரானிகி' படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் இந்த படம் கடந்த மாதம் 10 தேதி வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. தமிழில் இந்த படத்திற்கு அடடே சுந்தரா என்றும் பெயர் வைத்துள்ளனர்.

    Also read... குழந்தைகளை கவரவே மைடியர் பூதம் படத்தில் மீசையின்றி நடித்தேன் - பிரபுதேவா!

    ரோகிணி, நதியா, அழகன் பெருமாள் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 'மைத்ரி மூவி மேக்கர்ஸ்' தயாரிக்கும் இப்படத்திற்கு விவேக் சாகர் இசையமைத்துள்ளார்.





    இந்நிலையில் அடடே சுந்தரா திரைப்படம் நெட்பிளிக்ஸில் வரும் 10-ம் தேதி வெளியாக உள்ளது. இதனை அறிவிக்கும் விதமாக படக்குழு டிரெய்லர் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Entertainment

    அடுத்த செய்தி