Union
Budget 2023

Highlights

ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பெற்றோருடன் லண்டனில் பிறந்தநாளைக் கொண்டாடிய அனோஷ்கா அஜித்!

பெற்றோருடன் லண்டனில் பிறந்தநாளைக் கொண்டாடிய அனோஷ்கா அஜித்!

அனோஷ்கா அஜித்

அனோஷ்கா அஜித்

ஜனவரி 11-ஆம் தேதி தனது துணிவு திரைப்படம் வெளியாவதற்கு முன்னதாக அஜித் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

லண்டனில் தனது பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடியிருக்கிறார் நடிகர் அஜித்தின் மகள் அனோஷ்கா.

அஜித் குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் லண்டனில் விடுமுறையில் உள்ளனர். சமீபத்தில் அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இதற்கிடையே நேற்று பிறந்தநாளைக் கொண்டாடிய தனது மகள் அனோஷ்காவிற்கு வாழ்த்து சொன்ன ஷாலினி அஜித், சில படங்களையும் இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார். லண்டனில் எடுக்கப்பட்ட அந்தப் படத்தில் தாயும் மகளும் கட்டிப்பிடித்து அன்பை பரிமாறிக் கொண்டனர்.

ஜனவரி 3-ம் தேதியான நேற்று தனது பிறந்தநாளைக் கொண்டாடிய அனோஷ்கா, தனது பெற்றோர் மற்றும் சகோதரர் ஆத்விக் ஆகியோருடன் லண்டனில் நேரம் செலவிட்டார். அஜித் எப்போதும் தனது குடும்பத்தை லைம் லைட்டில் இருந்து விலக்கி வைத்திருப்பார். சமூக ஊடகங்களில் கூட மிகக் குறைவான அளவே அவர்களின் புகைப்படங்கள் பகிரப்படுகின்றன. தனது குழந்தைகளின் பள்ளி நிகழ்வுகள் மற்றும் பெற்றோர்-ஆசிரியர் சந்திப்புகளில் தவறாமல் கலந்துக் கொள்கிறார் அஜித்.


2023-ல் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் படங்கள்!

ஜனவரி 11-ஆம் தேதி தனது துணிவு திரைப்படம் வெளியாவதற்கு முன்னதாக அஜித் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துணிவு படத்துடன் விஜய்யின் வாரிசு படமும் வெளியாவதால், இந்த பொங்கல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே எப்போதும் தனது படங்களை புரொமோட் செய்யாத அஜித் இந்தமுறையும் ரிலீஸுக்கு முன்பாக விடுமுறைக்கு சென்றிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Ajith