குடியை கொண்டாடும் ஆஸ்கர் விருது பெற்ற படம் - அமேசானில் வெளியாகிறது

அனெதர் ரவுண்டு

இவரது இயக்கத்தில் மேட்ஸ் நடித்த தி ஹண்ட் திரைப்படம் ஓர் அற்புதம். பல சர்வதேச விருதுகளை வென்றது.

 • Share this:
  ஒரு நண்பர்கள் குழாம். வேலையும், வாழ்க்கையும் போரடிக்கிறது. ரத்தத்தில் ஆல்கஹாலின் அளவை அதிகரித்தால் உற்சாகமாகலாம் என்று குடிக்க ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் எதிர்பார்த்தது போல் வாழ்க்கை கொண்டாட்டமாகிறது. ஒரு குறிப்பிட்ட காலத்தில் குடியை நண்பர்கள்விட, ஒருவர் மட்டும் தொடர்ந்து குடிக்கிறார். அந்த குடி என்ன மாதிரியான விளைவை ஏற்படுத்துகிறது?

  கேட்கவே ஆல்கஹால் குடித்த எபெக்டை தருகிறதல்லவா? இதுதான் இந்த வருட ஆஸ்கரில் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருது வென்ற, அனதர் ரவுண்ட் படத்தின் கதை. டென்மார்க்கை சேர்ந்த தாமஸ் வின்டர்பெர்க் படத்தை இயக்க, டென்மார்க்கின் உச்ச நட்சத்திரம் மேட்ஸ் மிக்கெல்சன் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தாமஸ் வின்டர்பெர்க் டென்மார்க்கின் முக்கிய இயக்குனர்.

  இவரது இயக்கத்தில் மேட்ஸ் நடித்த தி ஹண்ட் திரைப்படம் ஓர் அற்புதம். பல சர்வதேச விருதுகளை வென்றது. இப்போது அனதர் ரவுண்ட் மூலம் இன்னொரு அலையை கிளப்பியிருக்கிறார்கள். ஜேம்ஸ்பாண்ட் படமான தி கேஸினோ ராயலில் வில்லனாக வருகிறவர் இவர்தான். கிங் ஆர்தர், கிளாஸ் ஆஃப் டைட்டன், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் என பல முக்கிய படங்களில் நடித்துள்ளார். அனதர் ரவுண்ட் திரைப்படம் மே 20 அமேசான் பிரைமில் வெளியாகிறது.

  இந்த வருடம் ஆஸ்கரில் சிறந்த துணை நடிகைக்கான விருதை வென்றது தென்கொரிய படமான Minari. இது தற்போது அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது. தென்கொரிய நடிகர் ஒருவர் சிறந்த நடிப்புக்கான ஆஸ்கர் விருதை பெறுவது இதுவே முதல்முறை. இந்தப் படம் சிறந்த துணை நடிகை உள்பட ஆறு விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: