அதர்வாவின் ’அட்ரஸ்’ முதல் சிங்கிள் வெளியீட்டு தேதி அறிவிப்பு

அதர்வா அட்ரஸ்

அட்ரஸின் படப்பிடிப்பு மே மாதம் முடிந்த நிலையில் ஜுன் இறுதியில் படத்தின் பர்ஸ்ட் லுக்கையும், டீஸரையும் வெளியிட்டனர்.

 • Share this:
  அதர்வா நடிப்பில் ’தள்ளிப்போகாதே’, ’குருதி ஆட்டம்’ ஆகியப் படங்கள் தயாராகி வெளியீட்டுக்கு காத்திருக்கின்றன. ’அட்ரஸ்’, ’ருக்குமணி வண்டி வருது’ படங்கள் தயாராகி வருகின்றன. இதில் ’அட்ரஸ்’ படத்தின் முதல் சிங்கிளை வரும் 16-ஆம் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.

  குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும், வானவராயன் வல்லவராயன் படங்களை இயக்கிய ராஜா மோகன் அட்ரஸ் படத்தை இயக்கியுள்ளார். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இதில் கோலிசோடா 2 படத்தில் நடித்த இசக்கி பரத் முக்கிய வேடத்தில் நடிக்க, அதர்வா பிரதானமான வேடத்தை ஏற்றுள்ளார். அவருக்கு ஜோடி பூஜா ஜவாரி. கொடைக்கானலின் மலைப்பதிகளில் இதன் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அட்ரஸின் படப்பிடிப்பு மே மாதம் முடிந்த நிலையில் ஜுன் இறுதியில் படத்தின் பர்ஸ்ட் லுக்கையும், டீஸரையும் வெளியிட்டனர். தற்போது முதல் சிங்கிளை வரும் 16-ஆம் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். க்ரிஷ் கோபாலகிருஷ்ணன் படத்துக்கு இசையமைத்துள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: