விநியோகஸ்தராக இருந்து தமிழின் முன்னணி தயாரிப்பாளராக உயர்ந்தவர் ஆஸ்கர் ரவிச்சந்திரன். அந்நியன் படம் வந்த காலத்தில் இவர்தான் தமிழின் முதன்மையான தயாரிப்பாளராக இருந்தார். இவரது சினிமா பயணம் விநியோகஸ்தராக தொடங்கியது. ஜாக்கிசான் நடித்தப் படங்களை வாங்கி விநியோகித்து வந்தார்.
நாம் சொல்வது 25 வருடங்களுக்கு முன்னால். அப்போது ஜாக்கிசானுக்கென்று தனி ரசிகர்வட்டம் தமிழ்நாட்டில் இருந்தது. சென்னை அலங்கார் திரையரங்கில் ஜாக்கிசான் படங்கள் தொடர்ச்சியாக வெளியாகும்.
ஜாக்கிசான் படத்தின் முதல்நாள் முதல் காட்சியில் ரசிகர்கள் காசுகளை வாரியிறைத்த சம்பவத்தை வீடியோ எடுத்து ஜாக்கிசானுக்கு ஆஸ்கர் ரவிச்சந்திரன் அனுப்பி வைக்க, அன்றிலிருந்து ஜாக்கிசானுக்கும், ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கும் இடையில் நட்பு ஏற்பட்டது.
அந்த பழக்கத்தை வைத்து தசாவதாரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக ஜாக்கிசானை சென்னைக்கு வரவழைத்தார். இப்போது அந்நியன் படத்தை ஜாக்கிசானையும், முன்னணி பாலிவுட் நடிகரையும் வைத்து ரீமேக் செய்வேன் என அறிவித்துள்ளார்.
அந்நியன் படத்தை ஷங்கர் இந்தியில் ரன்வீர் சிங்கை வைத்து ரீமேக் செய்வதாக அறிவித்ததும் பிரச்சனை உண்டானது. அந்நியனின் தயாரிப்பாளர் என்றவகையில் அந்தப் படத்தின் கதை உரிமை என்னிடம்தான் உள்ளது. எழுத்தாளர் சுஜாதாவிடமிருந்து கதையை நான் வாங்கி வைத்திருக்கிறேன் என்றார் ஆஸ்கர் ரவிச்சந்திரன்.
ஆனால், சுஜாதா அந்நியனின் வசனகர்த்தா மட்டும்தான். கதை என்னுடையது. படத்தின் டைட்டிலிலும் அப்படித்தான் உள்ளது என ஆஸ்கர் ரவிச்சந்திரன் ஊதிய காப்பிரைட் பலூனில் பெரிய பொத்தலாகப் போட்டார் ஷங்கர். அந்த காயம் இன்னும் ஆறவில்லை.
ஷங்கருக்கு நெருக்கடி கொடுப்பதாக நினைத்து ஜாக்கிசானை வைத்து அந்நியனை ரீமேக் செய்வேன் என்கிறார். கதை உரிமை சட்டப்படி ஷங்கரிடம் இருக்கையில் ஆஸ்கர் ரவிச்சந்திரனால் எப்படி அந்நியனை ரீமேக் செய்ய முடியும்?
இன்னொரு சம்பவம். காப்பிரைட் குறித்து அறியாமல் தனது நிறுவனத்துக்கு ஆஸ்கர் ஃபிலிம்ஸ் என்று பெயர் வைத்ததோடு ஆஸ்கர் விருதை தனது கம்பெனியின் அடையாளமாகவும் வைத்துக் கொண்டிருந்தார் ஆஸ்கர் ரவிச்சந்திரன். தசாவதாரம் படத்தின் போது இது பிரச்சனையாகி அந்த ஆஸ்கர் விருது எம்பளத்தை நீக்க வேண்டியதாயிற்று.
Also read... வாழை இலைக்கு விளம்பரம் செய்த தமன்னா...!
அந்நியனை ரன்வீர் சிங்கை வைத்து ஷங்கர் எடுக்கட்டும். நீங்கள் ஜாக்கிசானை வைத்து எடுங்கள். ரசிகர்கள் பார்க்க மாட்டோம் என்றா சொல்லப் போகிறார்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.