• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Annaatthe twitter review: எப்படி இருக்கிறது ரஜினியின் அண்ணாத்த?  ட்விட்டர் விமர்சனம்!

Annaatthe twitter review: எப்படி இருக்கிறது ரஜினியின் அண்ணாத்த?  ட்விட்டர் விமர்சனம்!

அண்ணாத்த

அண்ணாத்த

அண்ணாத்த படத்தை பார்த்தவர்கள் அது குறித்து ட்விட்டரில் பல கலவையான விமர்சனங்களை தெரிவித்துள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    ரஜினிகாந்த நடித்து இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள அண்ணாத்த படம் குறித்து பல கலவையான விமர்சனங்களை மக்கள் ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.

    இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள படம் ‘அண்ணாத்த’. இந்தப் படத்தில் அவருடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜெகபதி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

    இந்நிலையில்  அண்ணாத்த படத்தின் ட்ரைலர், டீசர், பாடல்கள்  வெளியான போது ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடினர். இதனால் படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருந்த நிலையில் இன்று தீபாவளியை முன்னிட்டு காலை படம் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில் அண்ணாத்த படத்தை பார்த்தவர்கள் அது குறித்து ட்விட்டரில் பல கலவையான விமர்சனங்களை தெரிவித்துள்ளனர்.































    சிவா இயக்கத்தில் வெளியான வீரம், விஸ்வாசம் போன்று கூட்டு குடும்பப் பின்னணியில் அண்ணாத்த தயாராகியுள்ளது. அண்ணன் - தங்கை பாசம் படத்தில் பிரதானமாக இருக்கிறது என்றும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், பண்டிகை நேரத்தில் படம் வெளியாகியுள்ளதால் குடும்பத்துடன் சென்று ஒரு முறை பார்க்கலாம் என்றும் பலர் விமர்சனங்களை தெரிவித்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: