முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / அரங்கம் முழுக்க தெறிக்க தெறிக்க... - அக்டோபர் 14 வெளியாகிறது அண்ணாத்த டீசர்

அரங்கம் முழுக்க தெறிக்க தெறிக்க... - அக்டோபர் 14 வெளியாகிறது அண்ணாத்த டீசர்

அண்ணாத்த போஸ்டர்

அண்ணாத்த போஸ்டர்

ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படத்தின் டீசர் அக்டோபர் 14-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். டி இமான் இசையமைத்துள்ளார். அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அண்ணாத்த படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் படக்குழு தொடர்ச்சியாக அப்டேட்டுகளை வெளியிட்டுவருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய கடைசி பாடலான அண்ணாத்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான’ அண்ணாத்த பேசுனா ஸ்டைலு பாடல் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ’ சாரல் காற்றே’ என்ற காதல் பாடலும் வெளியானது.

இந்தப் பாடலின் ரஜினிகாந்த்தின் இளமைத் தோற்றம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்த பாடலை சித் ஸ்ரீராம் மற்றும் ஸ்ரேயா கோஷல் பாடியுள்ளனர். இரண்டு பாடலும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில் அண்ணாத்த படத்தின் டீசர் ஆயுத பூஜை விருந்தாக அக்டோபர் 14-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

First published:

Tags: Annaatthe