• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • தீபாவளி படங்களில் முதலாவதாக தணிக்கை சான்றிதழ் பெற்ற அண்ணாத்த!

தீபாவளி படங்களில் முதலாவதாக தணிக்கை சான்றிதழ் பெற்ற அண்ணாத்த!

அண்ணாத்த

அண்ணாத்த

Annaatthe: தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4 அண்ணாத்த தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் வெளியாகிறது. படத்தைப் பார்த்த தணிக்கைக்குழு படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
சன் பிக்சர்ஸின் அண்ணாத்த படம் தீபாவளிக்கு வெளியாகும் நிலையில், படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் பெற்றுள்ளனர்.

கடந்த 25 வருடங்களாக அரசியலுக்கு வருவேன் என்று திரைப்படங்கள் மூலம் எதிர்பார்ப்பை உருவாக்கி வைத்திருந்த ரஜினி, தனது படங்கள் வெளியாகும் போது, ரசிகர்களின் அரசியல் ஆசையை தூண்டும்வகையில் பேசுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். 'நான் எப்போ வருவேன், எப்படி வருவேன்னு தெரியாது, ஆனா, வர வேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்' என்பது போன்ற அரசியல் வருகை குறித்த அவரது திரைப்பட வசனங்கள் ஏராளம்.

ஒருகட்டத்தில் படவெளியீட்டுக்கு முன்பாக மன்ற நிர்வாகிகளை அழைத்து கூட்டங்கள் நடத்த ஆரம்பித்தார். 'கடமையை செய் பலனை எதிர்பார்' என்று பேனர் வைத்து அவர் நடத்திய கூட்டங்கள் ரசிகர்களின் அரசியல் ஆசையை தூண்டிவிட்டன. இறுதியில், தனிக்கட்சி தொடங்குகிறேன் என்று அறிவித்து தனது 25 ஆண்டுகால புலி வருது கதைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

Also read... செல்வராகவனின் நானே வருவேன் - கௌபாய் லுக்கில் அசத்தும் தனுஷ்!

ஆனால், ஒரு மாதம் ஆவதற்குள், 'கட்சியும், இல்லை கொடியும் இல்லை, ஆளைவிடுங்க' என்று அரசியல் பேச்சுக்கு சமாதிகட்டினார் ரஜினி. அவரது உண்மையான ரசிகர்களுக்கு இதில் எந்த ஏமாற்றமுமில்லை. தலைவர் பூரண நலத்துடன் படங்கள் நடித்தால் போதுமானது என்று சமாதானமடைந்தனர்.

ரஜினியை வைத்து தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்று கனவு கண்டு கொண்டிருந்த சில மீடியாக்களும், அரசியல் கட்சிகளும் அவரை தூற்ற ஆரம்பித்தனர். ரஜினியின் மாஸ் இமேஜ் அவ்வளவுதான் என்று அறிவித்தனர்



ரஜினியின் அரசியல் என்ட்ரிக்கு என்ட் கார்ட் போட்ட பின் வெளியாகும் முதல் படம் அண்ணாத்த. பலரும் சொல்வது போல் ரஜினியின் இமேஜ் முடிந்து போன சரித்திரமா இல்லை மிச்சம் இருக்கிறதா என்பதை அண்ணாத்தயின் வசூல் சொல்லிவிடும். அந்தவகையில் அண்ணாத்த படத்தை பலரும் ஆவலுடன் எதிர்நோக்குகின்றனர்

தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4 அண்ணாத்த தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் வெளியாகிறது. படத்தைப் பார்த்த தணிக்கைக்குழு படத்துக்கு யு/ சான்றிதழ் வழங்கியுள்ளது. அதாவது, 18 வயதுக்குட்பட்டோர் பெற்றோர் அல்லது 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் துணையுடன் படத்தைப் பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: