• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • அண்ணாத்த படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

அண்ணாத்த படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

முதல்நாள் வசூலில் அண்ணாத்த கிங்காக இருந்தாலும், வார நாள்களின் கலெக்ஷன் முக்கியமானது

  • News18
  • Last Updated :
  • Share this:
ரஜினியின் அண்ணாத்த நேற்று தீபாவளியை முன்னிட்டு வெளியானது. படம் சுமார் என விமர்சகர்கள் கூறினாலும், முதல்நாள் கூட்டம் அம்மியது. 

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை இன்றுவரை ரஜினிதான் கலெக்ஷன் கிங். அவர் நடித்த 2.0 படமே தமிழ் சினிமாவில் அதிகம் வசூல் செய்த திரைப்படமாகும். சென்னை மாநகரில் சுமார் 25 கோடிகளை வசூலித்த ஒரே படமும் 2.0 தான்

சென்னையில் 15 கோடிகளைத் தாண்டிய நான்கு படங்களில் மூன்று ரஜினியுடையது. ஒன்று விஜ;ய்யின்  சர்க்கார். ரஜினியின் தோல்விப் படமான லிங்காவின் வசூல், அஜித்தின் வெற்றிப் படமான வேதாளத்துக்கு இணையாக வரும். இந்த புள்ளி விவரங்களிலிருந்து யார் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்பதை அறிந்து கொள்ளலாம்.

அண்ணாத்த படத்தை இளம் பார்வையாளர்கள் இரக்கமேயில்லாமல் கழுவி ஊற்றுகிறார்கள். நீண்டகால ரஜினி ரசிகர்கள் - இவர்கள் ஐம்பது வயதை தாண்டியவர்கள் - தலைவரைப் போல வருமா, என்னா ஆக்டிங், என்னா சென்டிமெண்ட் என்று வழக்கம்போல் புல்லரிக்கிறார்கள். .

அப்படியே பத்திரிகைகள் பக்கம் வந்தால், ஒரு ஸ்டார், இரண்டு ஸ்டார் என கொடுத்து அண்ணாத்தயை கலாய்க்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை அண்ணாத்த படமேயில்லை. ஆனால், ரஜினி இதனையெல்லாம் தாண்டியவர். முதல் நாள் கலெக்ஷனில் படம் பட்டையை கிளப்பியிருக்கிறது. தமிழகத்தில் 24 - 26 கோடிகளை வசூலித்திருப்பதாக கூறுகின்றனர். ஆஸ்ட்ரேலியாவில் நேற்றிரவு 11 மணிவரை 1,14,047 ஆஸ்ட்ரேலியன் டாலர்களை Nலித்துள்ளது. நமது ரூபாயில் சுமார் 63 லட்சங்கள்

Also read... மம்முட்டியின் தெலுங்குப் படத்தில் அதுல்யா ரவி...?

முதல்நாள் வசூலில் அண்ணாத்த கிங்காக இருந்தாலும், வார நாள்களின் கலெக்ஷன் முக்கியமானது. தீபாவளி விடுமுறை இன்னும் மூன்று தினங்கள் உள்ளன. அதற்குள் அண்ணாத்த குடும்ப ஆடியன்ஸின் உதவியால் பாதுக்காப்பான எல்லைக்குள் சென்று விடும் என்பதையே முதல்நாள் வசூல் காட்டுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: