9 வயதில் மகள், முதல் திருமணம் விவாகரத்து... மறுமணம் செய்த ரஜினி, அஜித் பட நடிகர்!

பாலா - எலிசபெத்

பாலாவின் திருமண வாழ்க்கையையொட்டி தான் சிவா, விஸ்வாசம் படத்தை இயக்கியதாகக் கூறப்படுகிறது.

 • Share this:
  இயக்குநர் சிவாவின் தம்பியும், நடிகருமான பாலா தற்போது இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.

  விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் சிவா தற்போது ‘அண்ணாத்த’ படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்கிறார். அவருடன் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன் இயக்குநர் சிவாவின் தம்பியும், ஆவணப்பட இயக்குனர் ஜெயக்குமாரின் மகனுமான நடிகர் பாலா என்கிற பாலக்குமாரும் அண்ணாத்தே படத்தில் நடிக்கிறார்.

  பாலா ஏற்கனவே 'வீரம்' படத்தில் அஜீத்தின் தம்பியாக நடித்தார். தமிழில் 'அன்பு' என்கிற படத்தில் அறிமுகமானார். மலையாளத்தில் Big B என்கிற படத்தில் மம்முட்டியின் தம்பியாக முருகன் என்கிற தமிழ் ஸ்டண்ட் ஆக்டராக நடித்தார் பாலா. ஒரே படத்தில் கேரள மக்களின் இதயத்தில் இடம் பிடித்தார். மோகன்லாலின் புலிமுருகன் படத்தில் வில்லனாகவும் நடித்திருந்தார்.

  இந்நிலையில் பாலாவுக்கு தற்போது இரண்டாவது திருமணம் நடந்துள்ளது. அதன் படங்களை பாலா தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அவருக்கு அம்ருதா என்பவருடன் முதல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகள் இருக்கிறார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.  பாலாவின் திருமண வாழ்க்கையையொட்டி தான் சிவா, விஸ்வாசம் படத்தை இயக்கியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, பாலாவுக்கும் - அம்ருதாவுக்கும் கடந்த 2019-ம் விவாகரத்து ஆனது.

  இந்நிலையில் தற்போது எலிசபெத் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார் பாலா. இதனை அவர் முகநூலில் அறிவித்ததையடுத்து, அவர்களுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: