சினிமாவில் இன்னும் சிங்கம்தான்.. பட்டையை கிளப்பும் அண்ணாத்த படத்தின் ரஜினிகாந்த் லுக்!

அண்ணாத்த லுக்

சினிமாவில் அவர் இன்னும் சிங்கம்தான் என்பதை அண்ணாத்த படம்தான் நிரூபிக்க வேண்டும்.

 • Share this:
  அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை நேற்று சன் பிக்சர்ஸ் வெளியிட்டது.

  எத்தனை புதிய சூப்பர் ஸ்டார்கள் வந்தாலும் ரஜினியின் மாஸ் இன்னும் குறையாமல் அப்படியேதான் இருக்கிறது. அவரது புதிய படம் அண்ணாத்த தீபாவளிக்கு வெளியாவதை முன்னிட்டு படத்தின் பர்ஸ்ட் லுக்குக்காக ரசிகர்கள் காத்திருந்தனர். நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சன் பிக்சர்ஸ் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது.அத்துடன் நேற்றே படத்தின் மோஷன் போஸ்டரையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்தனர். சென்னையைச் சேர்ந்த ரசிகர்கள் பர்ஸ்ட் லுக் வெளியானதும், அந்தப் புகைப்படத்துடன் ரஜினியின் போயஸ்கார்டன் வீட்டிக்கு சென்று வீட்டு முன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

  இந்நிலையில், நேற்றே படத்தின் இரண்டாவது லுக்கையும் போஸ்டரையும் சன் பிக்சர்ஸ் வெளியிட்டது. மோஷன் போஸ்டரில் புல்லட்டின் மீது அரிவாளுடன் ஆக்ரோஷமாக அமர்ந்திருக்கும் ரஜினியின் புகைப்படம் அதில் இடம்பெற்றிருந்தது.
  25 வருடங்கள் அரசியலுக்கு வருவதாக ரஜினியும், ஊடகங்களும் பில்டப் தந்த நிலையில், சென்ற டிசம்பரில், தனிக்கட்சி தொடங்குவதாக அறிவித்து, சில வாரங்களிலேயே ஒருபோதும் அரசியல் பக்கம் வரமாட்டேன் என ஜகா வாங்கினார் ரஜினி.  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அவரது இமேஜ் அரசியல்வட்டாரத்தில் அடிவாங்கியது. சினிமாவில் அவர் இன்னும் சிங்கம்தான் என்பதை அண்ணாத்த படம்தான் நிரூபிக்க வேண்டும். அந்தவகையில் அண்ணாத்த ரஜினிக்கு முக்கியமான படம்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published: