ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Arjun: ஆஞ்சநேயருக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்த நடிகர் அர்ஜுன்!

Arjun: ஆஞ்சநேயருக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்த நடிகர் அர்ஜுன்!

அர்ஜுன்

அர்ஜுன்

200 டன் எடை கொண்ட ஒரே கல்லில் 28 அடி உயரம் 17 அடி அகலத்தில் ஆஞ்சநேயர் உட்கார்ந்து இருப்பது போன்று சிலை கோயிலில் வைக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

சொந்தமாக கோயில் கட்டி சிறப்பாக கும்பாபிஷேகம் செய்து முடித்திருக்கிறார் நடிகர் அர்ஜூன்.

நடிகர் அர்ஜுன் சென்னை போரூர் அருகே உள்ள கெருகம்பாக்கத்தில் ஆஞ்சநேயருக்கு கோவில் கட்டி இருக்கிறார். அவருக்கு சொந்தமான 20 ஏக்கர் பரப்பளவு உள்ள தோட்டத்தில் ஒரு ஏக்கரில் இந்த கோவிலை கட்டியுள்ளார். கர்நாடக மாநிலம் கொய்ரா என்ற கிராமத்தில் 200 டன் எடை கொண்ட ஒரே கல்லில் 28 அடி உயரம் 17 அடி அகலத்தில் ஆஞ்சநேயர் உட்கார்ந்து இருப்பது போன்று சிலையை வடித்து, 22 சக்கரங்கள் கொண்ட ராட்சத டிரக்கில் ஏற்றி கெருகம்பாக்கத்துக்கு கொண்டு வந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பின்னர் சில விஷேச பூஜைகள் மற்றும் கோவிலின் கும்பாபிஷேகம் நடந்தது. இதற்காக குறிப்பிட்ட சிலரை மட்டுமே அழைத்த அர்ஜுன், தனது யூடியூப் சேனல் மூலம் நேரடி ஒளிப்பரப்பை செய்தார். பின்னர் அந்தப் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Actor Arjun