Home /News /entertainment /

Anjali: ஃபால் வெப் தொடரில் கதாநாயகியாக நடிக்கும் அஞ்சலி

Anjali: ஃபால் வெப் தொடரில் கதாநாயகியாக நடிக்கும் அஞ்சலி

அஞ்சலி

அஞ்சலி

தனுஷின் யாரடி நீ மோகினி, வசந்தபாலனின் அரவான் போன்ற படங்களில் ஒளிப்பதிவாளராக இருந்த சித்தார்த் ராமசாமி, இந்த ஃபால் வெப் தொடருக்கு ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    நடிகை அஞ்சலி ஃபால் என்ற வெப் சீரிஸில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    நடிகை அஞ்சலி, தற்போது இயக்குனர் ஷங்கரின் ராம் சரண், RC15 படத்தில் கமிட்டாகியுள்ளார். இதற்கிடையே தற்போது ஃபால் என்ற புதிய OTT வெப் சீரிஸில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதில் எஸ்.பி.பி சரண், சோனியா அகர்வால், சந்தோஷ் பிரதாப், நமிதா கிருஷ்ணமூர்த்தி, தலைவாசல் விஜய் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள்.



    தற்கொலை முயற்சிக்கு பின் 24 மணிநேரம் நினைவில்லாத ஒரு இளம் பெண்ணின் கதையை மையப்படுத்தி ‘ஃபால்’ வெப் தொடர் இயக்கப்படுகிறது. கமல்ஹாசனின் மும்பை எக்ஸ்பிரஸ், தனுஷின் யாரடி நீ மோகினி, வசந்தபாலனின் அரவான் போன்ற படங்களில் ஒளிப்பதிவாளராக இருந்த சித்தார்த் ராமசாமி, இந்த ஃபால் வெப் தொடருக்கு ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார். இதற்கு அஜேஷ் இசையமைக்க, கிஷன் சி செழியன் படத்தொகுப்பைக் கையாள்கிறார்.

    விக்ரம் வெற்றி விழாவில் ட்ரம்ஸ் வாசித்து அசத்திய கமல்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Anjali will play the female lead in the Fall web series, Actress Anjali, actress anjali marriage, anjali web series, anjali anjali actress instagram, anjali husband name, anjali actress wikipedia, actress anjali movies, நடிகை அஞ்சலி, நடிகை அஞ்சலி திருமணம், அஞ்சலி நடிகை இன்ஸ்டாகிராம், அஞ்சலி கணவரின் பெயர், அஞ்சலி நடிகை விக்கிபீடியா, நடிகை அஞ்சலி திரைப்படங்கள்,
    ஃபால் வெப் சிரீஸ்


    அஞ்சலி இதற்கு முன்பு OTT தளத்தில், பாவ கதைகள் என்ற அந்தாலஜி படத்தில் நடித்திருந்தார். அதில் அவர் விக்னேஷ் சிவனின் லவ் பண்ண உட்றனும் என்ற குறும்படத்தில் நடித்திருந்தார். மேலும் நவரசா ஆந்தாலஜியில் துணிந்த பின் என்ற தலைப்பில் வெளியான படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். தெலுங்கு OTT தொடர்களான ஜான்சி மற்றும் பஹிஷ்கர்ணாவிலும் அவர் கதாநாயகியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Actress Anjali

    அடுத்த செய்தி