நாயாட்டு தெலுங்கில் ரீமேக் - நிமிஷா சஜயன் வேடத்தில் பிரபல நடிகை!

நாயாட்டு

நாயாட்டில் நிமிஷா சஜயனின் கதாபாத்திரம் முக்கியமானது. அதில் அவர் போலீஸாக நடித்திருந்தார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
இந்த வருடம் ஏப்ரலில் நெட்பிளிக்ஸில் வெளியானது நாயாட்டு. மார்டின் ப்ரகாட் இயக்கத்தில் குஞ்சாகா போபன், ஜோஜு ஜார்ஜ், நிமிஷா சஜயன் நடித்த நாயாட்டு அனைத்துத் தரப்பினரின் பாராட்டையும் பெற்றது. இந்த வருடம் முதல் அரையாண்டில் வெளியான உலக அளவில் சிறந்த 25 படங்களுள் ஒன்றாக நாயாட்டு தேர்வு செய்யப்பட்டது.

இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை அல்லு அர்ஜுன் வாங்கியுள்ளார். தமிழில் ஐசரி கணேஷ் நாயாட்டின் ரீமேக் உரிமையை வாங்க ஆர்வம் காட்டி வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நாயாட்டில் நிமிஷா சஜயனின் கதாபாத்திரம் முக்கியமானது. அதில் அவர்  போலீஸாக நடித்திருந்தார். வீடு கட்டுவதில் ஏற்பட்ட தகராறில், அவரது சொந்தக்கார இளைஞன் ஆள்களை சேர்த்து பிரச்சனை தருவதே நாயாட்டின் மையம். அந்தப் பிரச்சனை எப்படி உருமாறி, மூன்று போலீஸ்காரர்களை கிரிமினலாக்கி ஓடவிடுகிறது என்பதை யதார்த்தத்துடன நாயாட்டு காட்டியதுAlso read... காரைக்குடியில் விக்ரம் படப்பிடிப்பு - புதிய அப்டேட்!

நாயாட்டின் தெலுங்கு ரீமேக்கில் நிமிஷா சஜயனின் வேடத்தில் நடிக்க அஞ்சலியை தேர்வு செய்துள்ளனர். மிக நல்ல தேர்வு. பிற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது.
Published by:Vinothini Aandisamy
First published: