தமிழில் ‘வருஷமெல்லாம் வசந்தம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அனிதா ஹாசனந்தனி. இதைத் தொடர்ந்து விக்ரமுடன் சாமுராய், எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கிய ‘சுக்ரன்’ ஆகியப் படங்களில் நடித்தார்.
மகாராஷ்டிராவை சேர்ந்த அனிதா, இந்தியில் பல படங்களில் நடித்துள்ளார். ஐஸ்வர்யாராயின் தால் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். அதோடு தெலுங்கு மற்றும் இந்தி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
Sivakarthikeyan: அப்போது தந்தை, இப்போது மகன் – நெகிழும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்
கடந்த 2013-ம் ஆண்டு, ரோகித் ரெட்டி என்பவரை காதல் திருமணம் செய்துக் கொண்ட அனிதாவுக்கு, கடந்த பிப்ரவரி 9-ந் தேதி ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு ஆரவ் ரெட்டி என்று பெயர் சூட்டியுள்ளனர். இந்நிலையில் தனது குழந்தை ஆரவ் ரெட்டிக்காக இன்ஸ்டாகிராமில் ஒரு புதிய பக்கத்தையும் ஆரம்பித்துள்ளார் அனிதா. குழந்தை சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் அதில் பதிவிடுவதற்காகவே, அவர் இந்த புதிய பக்கத்தை தொடங்கியுள்ளதாக தெரிகிறது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்