ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Anirudh: ஆனந்த் எல். ராயின் படத்துக்கு இசையமைக்கும் அனிருத்...?

Anirudh: ஆனந்த் எல். ராயின் படத்துக்கு இசையமைக்கும் அனிருத்...?

அனிருத்

அனிருத்

பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கும் படத்தில் இசையமைப்பாளராக அனிருத் இணைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கும் படத்தில் இசையமைப்பாளராக அனிருத் இணைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  'ஒய் திஸ் கொலவெறி' என்ற ஒரே பாடலில் இந்திய அளவில் கவனம் பெற்றவர் அனிருத். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிப் படங்களுக்கு இசையமைத்திருக்கும் அனிருத், தற்போது சிவகார்த்திகேயனின் டாக்டர், டான், விக்னேஷ் சிவனின் காத்து வாக்குல ரெண்டு காதல், விஜய் 65, கமலின் விக்ரம், இந்தியன் 2 ஆகிய படங்களுக்கு இசையமைக்கிறார்.

  இந்தியில் 2013-ல் வெளியான டேவிட் படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார். சுமார் எட்டு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இந்தியில் இசையமைக்கும் வாய்ப்பு அனிருத்தை தேடி வந்துள்ளது. ராஞ்சனா படத்தின் மூலம் தனுஷை இந்தியில் அறிமுகப்படுத்தியவர் ஆனந்த் எல். ராய். இவர் தற்போது தனுஷ், சாரா அலிகான், அக்ஷய்குமார் நடிப்பில் அத்ரங்கி ரே என்ற படத்தை இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் படத்துக்கு இசையமைத்துள்ளார். மார்ச்சில் வெளியாகியிருக்க வேண்டிய படம், கொரோனா காரணமாக ஆகஸ்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

  அக்‌ஷய்குமார் நடிப்பில் ரக்‌ஷா பந்தன் என்ற படத்தையும் இவர் இயக்குகிறார். தனது படங்களில் இசைக்கு பெரும் முக்கியத்துவம் தருகிறவர் ஆனந்த் எல். ராய். அவர் தனது படத்துக்கு இசையமைக்க அனிருத்தை அணுகியுள்ளார். அனிருத்தை அவர் ஒப்பந்தம் செய்தாரா? என்ன படம்? என்பது போன்ற விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

  கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரமும், அவரது மகன் துருவ் விக்ரமும் இணைந்து நடிக்கும் படத்திலிருந்து அனிருத் சமீபத்தில் விலகினார். ஆனந்த் எல். ராயின் படம் அந்த விலகலை ஈடு செய்யும்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Shalini C
  First published:

  Tags: Anirudh