முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஜுனியர் என்டிஆர் படத்துக்கு இசையமைக்கும் அனிருத்...!

ஜுனியர் என்டிஆர் படத்துக்கு இசையமைக்கும் அனிருத்...!

ஜுனியர் என்டிஆர், அனிருத்

ஜுனியர் என்டிஆர், அனிருத்

ஆர்ஆர்ஆர் படத்தை முடித்துள்ள ஜுனியர் என்டிஆர் அடுத்து கேஜிஎஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஒரு படமும், கொரட்டல சிவா இயக்கத்தில் ஒரு படமும் நடிக்கிறார்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

அஜித், விஜய்யிலிருந்து ரஜினி, கமல்வரை வந்துவிட்டார் அனிருத். இனி அவர் இசையமைக்க வேண்டிய டாப் நடிகர்கள் தமிழில் யாருமில்லை. தெலுங்கில் பவன் கல்யாண் படத்தைத் தொடர்ந்து ஜுனியர் என்டிஆர் படத்துக்கு இசையமைக்கிறார். 

தமிழைவிட தெலுங்கில் மாஸ் பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அங்குள்ள ஹீரோக்களுக்கு படத்துக்கு மூன்று ஹீரோயின்களும், அவர்களுடன் தலா இரண்டு டூயட்களும் அவசியம். பாஸ்ட் பார்வேர்டில் பார்ப்பது போல் படு வேகமான நடன அசைவுகளுடன் இந்த பாடல்கள் இருக்கும். தேவி ஸ்ரீ பிரசாத் இந்தவகை ஓவர் ஸ்பீடு பாடல்களில் வித்தகராக இருந்தார். இப்போது அவரது இடத்தை தமன் பிடித்துள்ளார். ஒரு வெரைட்டிக்கு ஜுனியர் என்டிஆர் படத்துக்கு அனிருத்தை ஒப்பந்தம் செய்துள்ளனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆர்ஆர்ஆர் படத்தை முடித்துள்ள ஜுனியர் என்டிஆர் அடுத்து கேஜிஎஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஒரு படமும், கொரட்டல சிவா இயக்கத்தில் ஒரு படமும் நடிக்கிறார். இதில் கொரட்டல சிவா படம் முதலில் தயாராகிறது. அதற்கு இசையமைப்பாளராக அனிருத்தை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

Also read... லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஹீரோவாகும் சூர்யா?

ஜுனியர் என்டிஆரின் 30 வது படமான இதற்கு அடுத்த மாதம் கம்போஸிங்கை அனிருத் தொடங்குகிறார். அக்டோபரில் படப்பிடிப்புக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.

First published:

Tags: Anirudh, Junior NTR