‘நீங்க ஹீரோவா நடிக்கிற முதல் படத்தின் தயாரிப்பாளர் நான்தான்...’ அனிருத் - சிவகார்த்திகேயன் ஜாலி சாட்டிங்!

அனிருத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டைலான புகைப்படம் ஒன்றைப் பதிவிட அதற்கு சிவகார்த்திகேயனும், இயக்குநர் நெல்சன் திலீப் குமாரும் கமெண்ட் பதிவிட்டுள்ளனர்.

‘நீங்க ஹீரோவா நடிக்கிற முதல் படத்தின் தயாரிப்பாளர் நான்தான்...’ அனிருத் - சிவகார்த்திகேயன் ஜாலி சாட்டிங்!
அனிருத் | சிவகார்த்திகேயன்
  • Share this:
முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத், தற்போது டாக்டர், சியான் 60, இந்தியன் 2 உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இசையமைப்பது தவிர்த்து பாடல் பாடுவது, இசை ஆல்பங்களில் நடிப்பது, சில விளம்பர படங்களில் நடிப்பது உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் தனது ஸ்டைலான புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனிருத் வெளியிட, அதைப்பார்த்த சிவகார்த்திகேயன், “சார்.. எப்போனாலும் சரி, என்னைக்குன்னாலும் சரி. நீங்க ஹீரோவா நடிக்கிற முதல் படத் தயாரிப்பாளர் நான் தான். நன்றி சார்" என்று கமெண்ட் பதிவிட அதற்கு பதிலளிக்கும் விதமாக டாக்டர் பட இயக்குநர் நெல்சன் திலீப் குமார், “அந்தப் படத்தை இயக்க ஒரு வாய்ப்பு கேட்டு வச்சுக்கிறேன். மனசுல வச்சுக்கோங்க” என்று கூறியுள்ளார்.

நெல்சன் திலீப் குமாருக்கு பதிலளித்த அனிருத், தயவு செய்து முதலில் டாக்டர் படத்தின் பணிகளை முடியுங்கள் என்று கூறியுள்ளார். அனிருத், சிவகார்த்திகேயன், நெல்சன் திலீப் குமார் ஆகிய மூவரும் மாற்றி மாற்றி கருத்து பதிவிட ரசிகர்களும் இடையிடையே தங்களது கமெண்ட்களை பதிவு செய்து மகிழ்ந்தனர்.

 
View this post on Instagram
 

A lil to the left.. to the right.. fix.. Pc @kunaldaswani


A post shared by Anirudh (@anirudhofficial) on


மேலும் படிக்க: தனது ஆண் குழந்தையின் பெயரை அறிவித்த டொவினோ தாமஸ்
First published: June 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading