• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Anirudh: ஆர்.ஆர்.ஆர் படத்தைத் தொடர்ந்து தமன் இசையில் பாடிய அனிருத்!

Anirudh: ஆர்.ஆர்.ஆர் படத்தைத் தொடர்ந்து தமன் இசையில் பாடிய அனிருத்!

அனிருத்

அனிருத்

ஆர்ஆர்ஆர் படத்தைத் தொடர்ந்து மகேஷ்பாபுவின் சர்காரு வாரி பட்டா படத்திலும் ஒரு பாடலை பாடியுள்ளார் அனிருத்.

  • Share this:
    இசையமைப்பாளர் அனிருத் தெலுங்கு திரையுலகின் பேசப்படும் நபராக மாறியிருக்கார். ஆர்ஆர்ஆர் படத்தின் தமிழ் பதிப்புக்காக ஒரு பாடலை பாடியவர், இப்போது தமன் இசையில் மகேஷ்பாபு படத்துக்கு ஒரு பாடல் பாடியுள்ளார்.

    இன்றைய இளம் இசையமைப்பாளர்களிடம் உள்ள நல்ல குணம், ஈகோ பார்க்காமல் அடுத்தவர்களின் இசையில் பாடுவதும், பங்களிப்பு செலுத்துவதும். யுவன், ஜீ.வி.பிரகாஷ், அனிருத், டிஇமான், சந்தோஷ் நாராயணன் உள்பட இளம்தலைமுறை இமேஜை ஓரமாக வைத்து வேலை செய்கிறது. ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் அனிருத் ஒரு பாடலை பாடியுள்ளார். அது முதல் பாடலாக நேற்று வெளியானது. பாடலுக்கு இசை கீரவாணி.

    anirudh, anirudh ravichander, anirudh ravichander thaman, anirudh ravichander rrr movie, music director anirudh ravichander, ss rajamouli anirudh, magesh babu anirudh, அனிருத், அனிருத் ரவிச்சந்தர், அனிருத் பாடல்கள், மகேஷ் பாபு அனிருத், அனிருத் தமன், அனிருத் ஆர் ஆர் ஆர்
    தமனுடன் அனிருத்


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஆர்ஆர்ஆர் படத்தைத் தொடர்ந்து மகேஷ்பாபுவின் சர்காரு வாரி பட்டா படத்திலும் ஒரு பாடலை பாடியுள்ளார் அனிருத். இந்தப் படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். ரஜினி, கமல், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைப்பவர் பாடுவதற்காக நட்புடன் தன்னைத் தேடிவரும் வாய்ப்புகளையும் மறுப்பதில்லை. உடனே சம்மதித்து பாடித் தருகிறார். அதுவும் இரு முக்கியமான தெலுங்குப் படங்களுக்கு அடுத்தடுத்து பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: