உற்சாகம் பொங்க அனிருத் வெளியிட்ட மாஸ்டர் வீடியோ

மாஸ்டர் படத்தை விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலையில் உற்சாகத்துடனான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் இசையமைப்பாளர் அனிருத்

உற்சாகம் பொங்க அனிருத் வெளியிட்ட மாஸ்டர் வீடியோ
விஜய் - அனிருத்
  • Share this:
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். இவர்களுடன் ஆன்ட்ரியா, சாந்தனு, கவுரி கிஷான், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் அனிருத் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. ஏப்ரல் 9-ம் தேதி திரைக்கு வர வேண்டிய இத்திரைப்படம் ஊரடங்கால் தள்ளிப் போயுள்ளது. கடந்த மாதம் 11-ம் தேதி முதல் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லரை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

இந்நிலையில் வாத்தி ரெய்டு பாடலுக்கு இசையமைத்தவுடன் அந்த இசையைக் கேட்ட முதல் தருணம் எப்படி இருந்தது என்பதை வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதில், காலை 6.45 மணிக்கு அனிருத் மற்றும் அவருடன் பணியாற்றுபவர்கள் வாத்தி ரெய்டு இசையை முதன்முதலாகக் கேட்டு உற்சாகத்துடன் நடனமாடுகின்றனர்.




இந்த வீடியோ அனிருத்தை மட்டுமல்ல விஜய் ரசிகர்களையும் உற்சாகப்படுத்தும் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

மேலும் படிக்க: வலிமை ஷூட்டிங் - தனது தீர்க்கமான முடிவை போனி கபூரிடம் தெரிவித்த அஜித்








First published: June 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading