இசையமைப்பாளர் அனிருத் தமிழால் இணைவோம் என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தியை தேசிய மொழியாக்க வேண்டும். ஆங்கிலத்துக்கு மாற்று இந்தி தான். இந்தி பேசாத மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆங்கிலத்துக்குப் பதில் இந்தி பேச வேண்டும். இந்தியை, ஆங்கிலத்துக்கு மாற்று மொழியாக கொண்டு வரும் தருணம் வந்து விட்டது என்றார்.
அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு அரசியல்வாதிகளும், திரைத்துறையினரும் தங்கள் கண்டனத்தை சமூக வலைதளங்களில் தெரிவித்தனர். அப்போது இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், தனது சமூக வலைதளத்தில் தமிழன்னையின் ஓவியத்தைப் பகிர்ந்து ’தமிழணங்கு’ எனக் குறிப்பிட்டிருந்தார். இது இந்திய அளவில் பேசு பொருளானது.
தமிழால் இணைவோம்... ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக களமிறங்கிய சிம்பு!
இந்நிலையில் பலரும் தமிழ் மொழிக்கு ஆதரவாக பலரும் சமூக வலைதளங்களில் ஒன்று திரண்டனர். இதற்கிடையே சிம்புவை தொடர்ந்து, இசையமைப்பாளர் அனிருத்தும் தமிழால் இணைவோம் என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.