ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

அனிருத்தின் தாத்தாவும் பிரபல இசையமைப்பாளருமான எஸ்.வி.ரமணன் காலமானார்... திரைபிரபலங்கள் இரங்கல்!!

அனிருத்தின் தாத்தாவும் பிரபல இசையமைப்பாளருமான எஸ்.வி.ரமணன் காலமானார்... திரைபிரபலங்கள் இரங்கல்!!

எஸ்.வி.ரமணன்

எஸ்.வி.ரமணன்

சென்னை ஆர்.ஏ.புரத்தில் வசித்து வந்த எஸ்.வி.ரமணன் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பிரபல இசையமைப்பாளரும் இயக்குனருமான எஸ்.வி.ரமணன் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார்.

  தமிழ் திரையுலகில் தற்போதைய டாப் இசையமைப்பாளர்களில் முன்னணி இடத்தில் இருப்பவர் அனிருத். இவரது தாத்தாவும், பழம்பெரும் இசையமைப்பாளருமான எஸ்.வி.ரமணன் இன்று காலை காலமானார். அனிருத்தின் தாயாரான லட்சுமி ரவிச்சந்தரின் தந்தை தான் எஸ்.வி.ரமணன்.

  எஸ்.வி ரமணன், வானொலி விளம்பரங்களுக்கு குரல் கொடுத்ததன் மூலம் மிகவும் பிரபலம் ஆனார். இவரது குரலுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமே இருந்தது. இவர் ஆன்மீகம் தொடர்பான ஆவணப்படங்களையும் தயாரித்து உள்ளார். இவரது ஆவணப்படம் ஒன்றிற்கு நடிகர் ரஜினிகாந்தும் குரல் கொடுத்திருந்தார்.

  சென்னை ஆர்.ஏ.புரத்தில் வசித்து வந்த எஸ்.வி.ரமணன் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். மக்கள் தொடர்பு கலையில் இவர் செய்த சாதனைக்காக இவருக்கு டாக்டர் பட்டமும் வழங்கப்பட்டது. இவர் நடிகர் ரஜினிகாந்தை ஒருமுறை நேர்காணலும் செய்துள்ளார்.

  ALSO READ | Aishwarya Rai: பிறைநிலவு மறையும் முன்னே முழுநிலவாய் வந்து நிற்பார் - ஐஸ்வர்யா ராயை பாராட்டிய பார்த்திபன்!

  இசையமைப்பாளர் எஸ்.வி. ரமணனின் மறைவுக்கு ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரது இறுதிச் சடங்கு இன்று மாலை நடைபெற உள்ளது.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Anirudh, Music director