Home /News /entertainment /

இசைஞானி இளையராஜா பாணியை பின்பற்றும் அனிருத்!

இசைஞானி இளையராஜா பாணியை பின்பற்றும் அனிருத்!

அனிருத் - இளையராஜா

அனிருத் - இளையராஜா

அஜித் நடிக்கும் புதிய திரைப்படத்திலும் அனிருத் இசையமைப்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் இன்னொரு இளையராஜாவாக உருவெடுத்து வருகிறார் அனிருத். 1980-களில் இளையராஜா, எல்லா முன்னணி நடிகர்களுக்கும் இசையமைத்தது போல தற்போது எல்லா முன்னணி நடிகர்களுக்கும் இசையமைப்பாளராக அனிருத் மாறி உள்ளார் . 

1980-களின் காலகட்டத்தில் இளையராஜா இசையமைக்கும் திரைப்படங்கள் எல்லாமே பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடிக்க, எல்லா முன்னணி தயாரிப்பாளர்களும், நடிகர்களும் இளையராஜாவின் இசை கூடமான பிரதாத் லேப் முன்பு அணிவகுத்து நின்றது தனிக்கதை. நடிகர்கள் ராமராஜன், மோகன் உள்ளிடோர் திரைப்படங்கள் இளையராஜா இசைக்காக மட்டுமே ஓடி வெள்ளி விழா கடந்தன.

1980-களில் தமிழ் சினிமாவில் கோலோச்சிய ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த், சத்யராஜ் உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் ஒரே நேரத்தில் இசையமைத்தவர் என்ற பெருமை இளையராஜாவிற்கு உண்டு. அது போன்ற ஒரு சூழலை தற்போது அனிருத் தமிழ் சினிமாவில் மீண்டும் நிகழ்த்திக் காட்டியுள்ளார்.



தமிழ் சினிமாவில் தற்போது அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படமாக உருவாகியுள்ளது விஜய் நடிப்பில் உருவாகி வரும் Beast திரைப்படம். நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைப்பாளராக பணியாற்றியதோடு, இந்த திரைப்படத்தில் இருந்து இதுவரை வெளியான இரண்டு பாடல்களை மாபெரும் வெற்றி பாடல்களாக மாற்றி காட்டியுள்ளார்.

AK 62 Update: விக்னேஷ் சிவனுடன் அஜித்தின் 62-வது படம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!



இதேபோல நடிகர் கமலஹாசன் நடிப்பில் உருவாகிவரும் விக்ரம் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்காக பல மிரட்டலான தீம் இசைகளை அனிருத் உருவாகியுள்ளதால் தற்பொழுது விக்ரம் திரைப்படத்தின் மீது, அதிக எதிர்பார்ப்பு ஏற்பட அனிருத்தும் ஒரு முக்கிய காரணமாக மாறி உள்ளார்.



18 வருஷம் கழிச்சும் அதே அன்போட அஜித் சார்... அம்பானி சங்கர் நெகிழ்ச்சி

விஜய்யின் beast திரைப்படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய ரஜினி திரைப்படத்திற்கும், அனிருத் இசை அமைப்பாளர் என அறிவித்துள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம். படத்தில் பணியாற்றும் நாயகி உள்ளிட்ட படக்குழுவினர் யாரும் உறுதி செய்யப்படாத நிலையில், ரஜினி நாயகன் என்பதையும் நெல்சன் இயக்குனர் என்பதையும் அனிருத் இசை அமைப்பாளர் என்பதையும் மட்டுமே படக்குழு அறிவித்துள்ளது. அந்த அளவிற்கு ஒரு திரைப்படத்தின் இயக்குனர், நடிகருக்குப் பிறகு மிக முக்கியமானவராக தற்போது அனிருத் மாறியுள்ளார்.



இவை தவிர அஜித் நடிக்கும் புதிய திரைப்படத்திலும் அனிருத் இசையமைப்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். அஜித் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தில் அனிருத் இசையமைக்கிறார் என்ற அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது.


ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களோடு சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டான், மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள காத்து வாக்குல 2 காதல் உள்ளிட்ட திரைப்படங்களுக்கும் அனிருத் தான் இசை அமைத்துள்ளார் என்பது தமிழ் சினிமாவில், தற்போது உள்ள அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் இசையமைக்கும் ஒருவர் என்ற பெருமையை அனிருத்திற்கு உரித்தாகியுள்ளது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Anirudh, Ilayaraja, Tamil Cinema

அடுத்த செய்தி