எங்களுக்குள் ஈகோ இல்லை... எனது மூத்த அண்ணன் - அனிருத் புகழாரம்

எங்களுக்குள் ஈகோ இல்லை... எனது மூத்த அண்ணன் - அனிருத் புகழாரம்
விஜய் - அனிருத்
  • Share this:
சந்தோஷ் நாராயணன் மற்றும் யுவன் சங்கர்ராஜாவை மாஸ்டர் படத்தில் பணியாற்ற வைத்தது குறித்து இசையமைப்பாளர் அனிருத் மனம் திறந்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. இதையடுத்து இந்தப் படத்தின் 8 பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

இதில் ‘அந்தக் கண்ண பாத்தாக்க’ என்ற பாடலை யுவன் சங்கர்ராஜாவும், ‘பொலக்கட்டும் பற பற’ என்ற பாடலை சந்தோஷ் நாராயணனும் பாடியுள்ளனர்.


யுவன் - சந்தோஷ் நாராயணன் இருவரும் தனது இசையில் பாடியிருப்பது குறித்து மனம் திறந்திருக்கும் அனிருத், “'மாஸ்டர்' படத்தின் பாடல்களை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வித்தியாசமாகப் படமாக்கியுள்ளார். இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களை நீங்கள் பாடினால் நன்றாக இருக்கும்' என்று யுவன் சங்கர் ராஜா மற்றும் சந்தோஷ் நாராயணன் ஆகியோரிடம் கேட்டபோது, இருவருமே உடனே ஒப்புக் கொண்டனர். 'ஒர் இசையமைப்பாளர் மற்றொரு இசையமைப்பாளரின் படங்களில் பணிபுரிவதா' என்ற ஈகோ அவர்களுக்கு கொஞ்சம் கூட இல்லை” என்று புகழாரம் சூட்டியுள்ளார் அனிருத்.

மேலும் தனது ட்விட்டர் பதிவில் யுவன்சங்கர் ராஜாவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, எனது மூத்த அண்ணன் என்று அதற்கு தலைப்பிட்டு அசத்தியுள்ளார் அனிருத்.மேலும் படிக்க: இயக்குநருக்காக டிவி நிகழ்ச்சியில் கண்ணீர் விட்டு அழுத அனுஷ்கா
First published: March 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்