• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ஆன்ட்ராய்டு குஞ்சப்பன் இந்தி ரீமேக்கில் அனில் கபூர்...?

ஆன்ட்ராய்டு குஞ்சப்பன் இந்தி ரீமேக்கில் அனில் கபூர்...?

அனில் கபூர்

அனில் கபூர்

ப்ரியதர்ஷன் இயக்கிய மலையாள ரீமேக் படங்களே அனில் கபூரை இந்தியில் ஸ்டாராக்கி, பல வருடங்கள் திரையுலகில் நிலைக்க வைத்தது.

  • News18
  • Last Updated :
  • Share this:
2019 இல் மலையாளத்தில் வெற்றி பெற்ற ஆன்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்சன் 5.25 படத்தின் இந்தி ரீமேக்கில் அனில் கபூர் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஆன்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்சன் 5.25 2019 இல் ரதீஷ் பாலகிருஷ்ணன் பொதுவாள் இயக்கத்தில் வெளியான படம். தொழில்நுட்பம் சார்ந்த எதையும் நிராகரிக்கும் பழமைவாதி 70 வயதான பாஸ்கரன் பொதுவாள். மிக்சியில் அரைப்பது பிடிக்காது. அம்மியில்தான் அரைக்க வேண்டும் என்ற மனநிலை கொண்டவர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரஷ்யாவில் வேலைக்கு செல்ல வேண்டிய நிலையில், பாஸ்கரன் பொதுவாளின் மகன் சுப்பிரமணியன் அவருக்கு உதவி செய்ய ஒரு ரோபோவை ஏற்பாடு செய்கிறான். அவருக்கும், ரோபோவுக்குமான பிணைப்பே படம். 70 வயது பெரியவராக சுராஜ் வெஞ்சாரமூடும், அவரது மகனாக சௌபின் ஷகிரும் நடித்திருந்தனர். படம் மலையாளத்தில் வெற்றி பெற்றது.

Also read... சன்னி லியோன் நடிக்க விரும்பும் படம்...!

இந்தப் படத்தை கூகுள் குட்டப்பன் என்ற பெயரில் தமிழில் தயாரித்து, பெரியவர் வேடத்தில் நடித்துள்ளார் கே.எஸ்.ரவிக்குமார். அவரது உதவி இயக்குனர்கள் சபரி சரவணன் படத்தை இயக்கியுள்ளனர். இதன் இந்தி ரீமேக் உரிமையை பெயித் ஃபிலிம்ஸ் வாங்கியுள்ளது.

சுராஜ் வெஞ்சாரமூடு நடித்த பாஸ்கரன் பொதுவாள் வேடத்தில் அனில் கபூரை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளனர். ப்ரியதர்ஷன் இயக்கிய மலையாள ரீமேக் படங்களே அனில் கபூரை இந்தியில் ஸ்டாராக்கி, பல வருடங்கள் திரையுலகில் நிலைக்க வைத்ததுவிரைவில் ஆன்ட்ராய்டு குஞ்சப்பனின் இந்தி ரீமேக்கை தொடங்க உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: