கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்கிறாரா அனில் கபூர்?

கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்கிறாரா அனில் கபூர்?
இயக்குநர் சங்கருடன் அனில் கபூர்
  • News18
  • Last Updated: October 1, 2019, 5:23 PM IST
  • Share this:
‘இந்தியன் 2’ படப்பிடிப்புத் தளத்தில் இயக்குநர் சங்கருடன் அனில் கபூர் இருக்கும் புகைப்படம் நேற்று வெளியானது.

சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சித்தார்த், விவேக் உள்ளிட்டோரின் நடிப்பில் உருவாகி வரும் படம் இந்தியன் 2. அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

ராஜமுந்திரி சிறைச்சாலையில் நடைபெற்று வந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெற்று வருகிறது.


இந்நிலையில் நேற்று படப்பிடிப்பு தளத்துக்கு வந்த நடிகர் அனில் கபூர் கமல்ஹாசனை சந்தித்து பேசிவிட்டதாகச் சென்றதாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்தியன் 2 படத்தில் அவர் நடிக்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கமல்ஹாசனை அனில் கபூர் சந்தித்திருப்பதால் தலைவன் இருக்கின்றான் படத்தில் இருவரும் இணைந்து பணியாற்ற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

வீடியோ பார்க்க: ஒரே பாட்டு ஓகோன்னு புகழ்... புள்ளிங்கோ புகழ் ஸ்டீபன்
First published: October 1, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்