உள்ளாடை குறித்து கேள்வி கேட்ட ரசிகர் - அனிகா சுரேந்திரன் வித்தியாச பதில்!

அனிகா சுரேந்திரன்

சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் அனிகா, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார்.

  • Share this:
    உள்ளாடை குறித்த கேள்விக்கு வித்தியாசமான பதில் தந்திருக்கிறார் நடிகை அனிகா சுரேந்திரன்.

    'என்னை அறிந்தால்’ மற்றும் விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்களிலும் அஜித்தின் மகளாக நடித்த அனிகா சுரேந்திரன் ரசிகர்களிடம் நன்கு பரிச்சயமானார். கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கிய குயின் என்ற வலைத் தொடரில், இளம் வயது ஜெயலலிதாவாக உற்சாகமான நடிப்பை வெளிப்படுத்தினார்.

    மலையாளத்தில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ள அனிகா, வித விதமாக ஃபோட்டோ ஷூட் நடத்தி, அதன் படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அவரின் படங்களைப் பார்ப்பதற்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உண்டு.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அதோடு சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் அனிகா, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். இந்நிலையில் ரசிகர் ஒருவர் நீங்கள் எந்த மாதிரியான உள்ளாடையைப் பயன்படுத்துகிறீர்கள் எனக் கேட்டிருந்தார். அதற்கு, “நீங்கள் சரியான சைஸ் உள்ள காட்டன் பிராவை பயன்படுத்த சிபாரிசு செய்கிறேன். ஆனால், உண்மையை சொன்னால் அது பார்க்க மோசமாக இருக்கும்” எனத் தெரிவித்திருக்கிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: