• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • "அமெரிக்க குடிமகளாக வெட்கப்படுகிறேன்" - ஜோ பைடனை விளாசிய ஏஞ்சலினா ஜோலி

"அமெரிக்க குடிமகளாக வெட்கப்படுகிறேன்" - ஜோ பைடனை விளாசிய ஏஞ்சலினா ஜோலி

 ஏஞ்சலினா ஜோலி

ஏஞ்சலினா ஜோலி

ஏஞ்சலினா ஜோலியின் குற்றச்சாட்டு உண்மை. அதேநேரம், அமெரிக்கப் படைகளின் 20 ஆண்டுகால ஆதிக்கத்தில் ஆப்கான் சீரழிந்தது குறித்து யாரும் பேசுவதில்லை என்ற குரலும் ஒலிக்கிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
பிரபல ஹாலிவுட் நடிகையும், சமூக ஆர்வலரும், அகதிகளுக்கான ஐநா சபையின் நல்லெண்ண தூதுவருமான ஏஞ்சலினா ஜோலி, ஆப்கானிலிருந்து அமெரிக்கப் படைகளை திரும்பப் பெறும் ஜோ பைடனின் முடிவை கடுமையாக விமர்சித்துள்ளார். 

அமெரிக்க நடிகர்கள் அரசின் கொள்கை முடிவுகளை விமர்சிப்பதும், கண்டிப்பதும் புதிதல்ல. அமெரிக்கர்கள் அங்குள்ள பூர்வகுடிகளான செவ்விந்தியர்களை கொடுமைப்படுத்துவதை கடுமையாக விமர்சித்தவர் மறைந்த நடிகர் மார்லன் பிராண்டோ. ஒரு பேட்டியில் நிருபர் கேள்வி கேட்க, அதற்கு பதிலளிக்காமல் செவ்விந்தியர்களின் நிலையை பல நிமிடங்கள் பேசி கவனத்தை ஈர்த்துள்ளார். இதேபோல் பலர். இப்போது ஏஞ்சலினா ஜோலி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடந்த 20 வருடங்களாக ஆப்கான் அரசுக்கு அமெரிக்க ராணுவம் உதவி செய்து வந்தது. பல லட்சம் கோடிகளை அதற்காக செலவு செய்தது. 20 வருடங்களுக்குப் பிறகு படையை வாபஸ் பெறுவதாகக் கூறிய சில தினங்களில் ஆப்கான் தாலிபான்களின் கைகளில் வீழ்ந்தது. இந்த நேரத்தில் அம்மக்களை அம்போவென விட்டு அமெரிக்கப் படைகள் வெளியேறக் கூடாது என்பது பலரது கோரிக்கை. அதையேஏஞ்சலினா ஜோலியும், டைம்ஸ் இதழில் கூறியுள்ளார்



"ஆப்கான் நாட்டின் உள்நாட்டு போர் குறித்து ஒவ்வொருவருக்கும் ஒரு கண்ணோட்டம் இருக்கலாம். ஆனால், இந்தப் போர் இப்படி முடிந்திருக்கக் கூடாது. சமாதானப் பேச்சுவார்த்தையில் தாலிபான்களுக்கு ஆதரவாக அமெரிக்கா ஏன் நடந்து கொண்டது என்று தெரியவில்லை. தன்னை நம்பிய கூட்டாளியை இப்படி பாதியில் கைவிட்டது பலரது தியாகத்துக்கு செய்த துரோகம். இதை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. ஒரு அமெரிக்க குடிமகளாக இதற்காக வெட்கப்படுகிறேன்" என்று கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனை அவரது முடிவுக்காக கண்டிப்பதாக உள்ளது ஏஞ்சலினா ஜோலி டைம்ஸ் இதழில் எழுதியிருக்கும் கருத்துக்கள்



Also read... ரசிகர்களை ஒருங்கிணைத்த அன்பு விஜயகாந்த்... 2k கிட்ஸ்களுக்கு தெரியாத பல தகவல்கள்!

ஏஞ்சலினா ஜோலியின் குற்றச்சாட்டு உண்மை. அதேநேரம், அமெரிக்கப் படைகளின் 20 ஆண்டுகால ஆதிக்கத்தில் ஆப்கான் சீரழிந்தது குறித்து யாரும் பேசுவதில்லை என்ற குரலும் ஒலிக்கிறது. அமெரிக்கா போர் தொடுத்த பிறகு ஈராக் நாசமானது போல், அமெரிக்கப் படைகளின் ஆதிக்கத்தில் ஆப்கான் நாசமானது என்பதே அங்குள்ள மக்களில் கணிசமானவர்கள் கருத்தாக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: