Home /News /entertainment /

உக்ரைன் நாட்டில் நடிகை ஏஞ்சலினா ஜோலி... போரில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார்

உக்ரைன் நாட்டில் நடிகை ஏஞ்சலினா ஜோலி... போரில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார்

உக்ரைன் குழந்தைகளுடன் ஏஞ்சலினா ஜோலி

உக்ரைன் குழந்தைகளுடன் ஏஞ்சலினா ஜோலி

Angelina Jolie Ukraine Visit - போர் பாதித்த உக்ரைன் நாட்டிற்கு பயணம் மேற்கொண்ட ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி, அங்குள்ள குழந்தைகளிடம் பேசி உற்சாகமூட்டினார்.

    பிரபல ஹாலிவுட் நடிகையான ஏஞ்சலினா ஜோலி, போர் பாதிப்புக்குள்ள உக்ரைன் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். 46 வயதான ஏஞ்சலினா ஜோலி, ஐக்கிய நாடுகள் சபையின் புலம்பெயர் மக்கள் பிரிவின் சிறப்பு தூதராக உள்ளார்.

    உக்ரைன் நாட்டில் போர் பாதிப்புக்குப் பின் சுமார் ஒரு கோடியே 27 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நாட்டை விட்டு வெளியேறி அண்டை நாடுகளுக்கு புலம் பெயர்ந்ததாக புள்ளி விவரம் தெரிவித்துள்ளது. இது அந்நாட்டின் மக்கள்தொகையின் 30 சதவீதமாகும்.

    இதையடுத்து போர் பாதித்த மக்களை பார்வையிட உக்ரைன் நாட்டிற்கு வந்த ஏஞ்சலினா ஜோலி லிவிவ் நகருக்கு சென்றார். அங்குள்ள பேக்கரிகளுக்கு எதிர்பாராத விதமாக சென்று அங்குள்ள மக்கள், குழந்தைகளிடம் பேசி உற்சாகப்படுத்தினார்.

    அங்குள்ள ரயில் நிலையங்களில் பணிபுரியும் தன்னார்வலர்களிடம் பேசிய ஏஞ்சலினா, அவர்களிடம் போர் பாதித்த மக்களின் நிலைமை குறித்து கேட்டறிந்தார். அங்கு மனநல மருத்துவர்கள் பணியில் உள்ளதாகவும், தினமும் ஒவ்வொரு மருத்துவரும் 15 பேரிடம் பேசி ஆலோசனை வழங்குவதாக அவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 2 முதல் 10 வயது குழந்தைகளே அங்கு அதிகம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    அங்குள்ள சிறுவர், சிறுமியர்களுடன் பேசி புகைப்படம் எடுத்து அவற்றை ஏஞ்சலினா மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.இது குறித்து ஏஞ்சலினா கூறியதாவது, "அவர்களின் அதிர்ச்சியை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. குழந்தைகள் சந்திக்கும் வலியை நான் உணர்கிறேன். யாராவது அவர்களை தேற்றினால் அது அவர்களுக்கு மேம்பட்ட உணர்வை தரும்" என்றார். மேலும், இந்த சந்திப்பின் போது ஒரு சிறுமி தனக்கு வந்த கனவை ஏஞ்சலினா ஜோலியிடம் கூறி பகிர்ந்துகொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: அமெரிக்க உளவுத்துறையின் முக்கிய பதவியில் இந்திய வம்சாவளி நபர்

    கடந்த மாதம் போர் பாதிப்புக்குள்ளான மற்றொரு நாடான ஏமனுக்கு ஐநா சிறப்பு தூதராக ஏஞ்சலினா பயணம் செய்து அம்மக்களை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Angelina Jolie, Russia - Ukraine

    அடுத்த செய்தி