மார்பக புற்றுநோய் சிகிச்சைக்கு பணமில்லாமல் போராடும் ‘அங்காடித் தெரு’ நடிகை

என்னிடம் காசு, பணம் இருந்து நான் நனறாக இருந்த போது என்னுடன் இருந்தவர்கள் இப்போது எனக்கு உதவி செய்ய முன் வரவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மார்பக புற்றுநோய் சிகிச்சைக்கு பணமில்லாமல் போராடும் ‘அங்காடித் தெரு’ நடிகை
நடிகை சிந்து
  • News18 Tamil
  • Last Updated: September 23, 2020, 6:22 PM IST
  • Share this:
மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் நடிகை சிந்து சிகிச்சைக்கு பணமில்லாமல் போராடி வருகிறார்.

‘அங்காடித் தெரு’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் குணச்சித்திர நடிகையாக நடித்திருப்பவர் நடிகை சிந்து. இவர் மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக நடிகர் ப்ளாக் பாண்டி சமீபத்தில் வீடியோ வெளியிட்டிருந்தார்.

அந்த வீடியோவில் நடிகர் பாண்டி தெரிவித்திருப்பதாவது, “நடிகை சிந்து மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருக்கிறார். சிகிச்சை எடுத்து வருகிறார். கொரோனா காலத்திலும் அவர் ஏராளமான திரைக்கலைஞர்களுக்கு உதவி செய்திருக்கிறார். அவர் உடல்நலம் பெற நம்மால் முடிந்த உதவியை செய்வோம்” என்று கூறியிருந்தார்.


இந்நிலையில் இணைய ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கும் நடிகை சிந்து, “நான் மன ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறேன். கடந்த 3 ஆண்டுகளாகவே எனக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்திருக்கிறது. எனக்குத் தெரியவில்லை. கொரோனா காலத்தில் நான் சிகிச்சைக்காக சென்ற போது சிறிய நீர்க்கட்டி இருக்கிறது என்று மருத்துவர்கள் சொன்னார்கள். அதனால் நான் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வந்தேன்.

பின்னர் எனக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. அதற்காக சிகிச்சை எடுத்துக் கொண்டபோது பணம் மொத்தமும் செலவானது. அப்போதுதான் நடிகர் ப்ளாக் பாண்டியை அழைத்தேன். அவர் எனக்கு கிட்டத்தட்ட 30 வருடங்களாக தெரியும். அவர் வந்த பின்னர் தான் உதவி கேட்டு வீடியோ வெளியிட்டோம். நிறைய உதவிகள் கிடைத்தன.

ஒருவாரத்துக்கு மருந்துகள் வாங்க மட்டும் ரூ.30000 தேவைப்படுகிறது. இதுவரை 6 லட்சத்துக்கும் அதிகமாக செலவு செய்திருக்கிறேன். நான் இல்லையென்றால் எனது மகளுக்கு ஆதரவு இல்லை. எனது யூனியனில் உதவி கேட்டேன். நடிகர் கார்த்தி, ஐசரி கணேஷ், ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் உள்ளிட்டோர் உடனடியாக உதவினார்கள்.POINTS TABLE:

நடிகர் சாய் தீனா, ரோபோ சங்கர் உள்ளிட்டோர் எனக்கு அறுவை சிகிச்சைக்காக உதவி செய்தார்கள். நான் உதவி கேட்டதற்காக சிலர் மொபைலை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டார்கள். என்னால் பயனடைந்தவர்கள் நான் கஷ்டத்தில் இருந்த போது உதவி செய்யவில்லை. இப்போது என்னைச் சுற்றி 10 பேர் இருந்தாலும் அவர்கள் பாசிட்டிவ்வான நபர்கள்.

என்னிடம் காசு, பணம் இருந்து நான் நனறாக இருந்த போது என்னுடன் இருந்தவர்கள் இப்போது எனக்கு உதவி செய்ய முன் வரவில்லை. என்னைப் பற்றியும் என் மகளைப் பற்றியும் தவறாக பேசுகிறார்கள். சிலர் என் மகள் ஒருவருடன் ஓடிப் போய்விட்டார் என்றெல்லாம் பேசுகிறார்கள். நான் எனது மகளுக்காக மட்டுமே வாழ்கிறேன். என் மகள் ஒரு டிசைனர். அவரைப் பற்றி தவறாகப் பேசும் போது என் மனது வலிக்கிறது.என் மருத்துவ சிகிச்சைக்காக நீங்கள் உதவி செய்தால் இதிலிருந்து மீண்டு வந்து புற்றுநோய் நோயாளிகளுக்கு உதவி செய்வேன். எனக்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றி” என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.
First published: September 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading