முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Andrea Jeremiah: ’ஆண்ட்ரியாவுக்கு தேசிய விருது கிடைக்கும்’ - அடித்துப் பேசும் மிஷ்கின்!

Andrea Jeremiah: ’ஆண்ட்ரியாவுக்கு தேசிய விருது கிடைக்கும்’ - அடித்துப் பேசும் மிஷ்கின்!

ஆண்ட்ரியா

ஆண்ட்ரியா

ஆண்ட்ரியாவை மிகவும் கஷ்டப்படுத்தி நடிக்க வைத்ததாகவும், அதற்காக அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதாகவும் கூறினார்.

  • Last Updated :

பிசாசு 2 படம் ஆண்ட்ரியாவுக்கு நடிப்புக்கான தேசிய விருதைப் பெற்றுத்தரும் என மிஷ்கின் கூறியுள்ளார்.

துப்பறிவாளன் 2 படத்தில் விஷாலுடன் ஏற்பட்ட மோதலால் அப்படத்திலிருந்து விலகிய மிஷ்கின் பிசாசு 2 படத்தை இயக்கி வருகிறார். இது 2014-ல் பாலாவின் பி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் மிஷ்கின் இயக்கிய பிசாசு படத்தின் இரண்டாம் பாகமாகும். முதல் பாகத்தில் நாகா, பிரகையா மார்டின், ராதாரவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். பயமுறுத்தும் பேய்க்குப் பதிலாக பாசக்கார பேயை இந்தப் படத்தில் காட்டியிருந்தார் மிஷ்கின். தெலுங்கில் 'டப்' செய்யப்பட்ட பிசாசு, கன்னடம் மற்றும் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது.

பிசாசு 2 படத்தில் ஆண்ட்ரியா, பூர்ணா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். முதன்மை கதாபாத்திரம் ஆண்ட்ரியாவுக்கு. இந்தப் படத்தில் அவர் நிர்வாணமாக நடித்ததாக கூறப்படுகிறது. இதுபற்றிய கேள்விக்கு பதிலளித்த மிஷ்கின், குறிப்பிட்ட காட்சியில் ஆண்ட்ரியாவை மிகவும் கஷ்டப்படுத்தி நடிக்க வைத்ததாகவும், அதற்காக அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதாகவும் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிசாசு 2 படத்தில் ஆண்ட்ரியா சிறப்பாக நடித்திருப்பதால், அவருக்கு நடிப்புக்கான தேசிய விருது கிடைக்கும் என்றும் மிஷ்கின் தெரிவித்துள்ளார். மிஷ்கின் படங்களுக்கு அதிகமும் இளையராஜாவே இசையமைக்கிறார். ஆனால், பிசாசு படத்துக்கு அரோல் கரோலி இசையமைத்திருந்தார். பிசாசு 2 படத்துக்கு கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். மிஷ்கின் படத்துக்கு அவர் இசையமைப்பது இதுவே முதல்முறை.

top videos

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    First published:

    Tags: Andrea Jeremiah