இது தப்பே இல்ல! ஆண்ட்ரியா பகிர்ந்த அந்த புகைப்படம்..
இது தப்பே இல்ல! ஆண்ட்ரியா பகிர்ந்த அந்த புகைப்படம்..
ஆண்ட்ரியா
Andrea Jeremiah : சமீபத்தில் எகிப்த், பாரிஸ் ஆகிய இடங்களுக்கு சுற்றுலா சென்று புகைப்படங்களையும் பகிர்ந்தார். இந்நிலையில் மற்றொரு சுவாரஸ்யமான புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் முன்னணி பாடகி மற்றும் நடிகையாகவும் வலம் வருகிறார். ஆண்ட்ரியா முதன் முதலில் ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதையடுத்து ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்து மிகவும் பிரபலமானார். ஆண்ட்ரியாவின் நடிப்பிற்கென தனி ரசிகர் கூட்டமே உள்ளது என்று கூறலாம்.
ஆண்ட்ரியா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான கமல், அஜித், விஜய் என பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஓ சொல்றியா மாமா பாடலை தமிழில் ஆண்ட்ரியா பாடியிருந்தார். இந்த பாடல் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வெற்றிப்பெற்றது. இந்த பாடலில் சமந்தா நடனமாடியிருப்பார். இப்படி ஆண்ட்ரியா பாட்டு பாடுவது, நடிப்பது என செம்ம பிசியாக இருந்தாலும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பார்.
இவருக்கு இன்ஸ்டாவில் 2.6 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளனர். ஆண்ட்ரியாவுக்கு பேக்கிங் செய்வது மிகவும் பிடிக்கும். லாக்டவுனில் தான் பேக்கிங் செய்த ரெசிபி ஆகியவற்றையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார்.
சமீபத்தில் எகிப்த், பாரிஸ் ஆகிய இடங்களுக்கு சுற்றுலா சென்று புகைப்படங்களையும் பகிர்ந்தார்.இந்நிலையில் மற்றொரு சுவாரஸ்யமான புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதில் கமலுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தில் என்ன தப்பில்ல என்று சொல்லி இருக்கிறார் என்று நினைக்கிறீர்களா ?
அந்த படத்துடன் மற்றொரு படத்தையும் இணைத்து பதிவிட்டுள்ளார். அதில் ‘ஒரே புடவையை 10 வருடம் கழித்து கட்டியுள்ளேன். ஒரு முறை பயன்படுத்திய உடையை மீண்டும் அணியலாம் எனக் கூறி #its ok to repeat your outfit என்ற ஹேஷ்டேக்கையும் பயன்படுத்தியுள்ளார். ஆண்ட்ரியாவின் இந்த போஸ்டை பார்த்த சிலர், நீங்கள் 10 வருடத்தில் கொஞ்சம் கூட மாறவில்லை என கமெண்ட் செய்துள்ளனர்.
Published by:Tamilmalar Natarajan
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.