ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

திருமணம் செய்துக் கொள்ள வேண்டிய அழுத்தம் இருந்தது - ஆண்ட்ரியா ஓபன் டாக்

திருமணம் செய்துக் கொள்ள வேண்டிய அழுத்தம் இருந்தது - ஆண்ட்ரியா ஓபன் டாக்

ஆண்ட்ரியா

ஆண்ட்ரியா

தனது திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்று தனக்கு எதுவும் தெரியாது என்றும், எதுவாக இருந்தாலும் தன் மகிழ்ச்சிக்கு தானே பொறுப்பு என்றும் கூறினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    30 வயதுக்குள் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்ற அழுத்தம் தனக்கும் இருந்ததாக நடிகை ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார். 

    நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா தற்போது மிஷ்கின் இயக்கத்தில் தான் நடித்த ‘பிசாசு 2’ படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். தற்போது அவர் நடித்த ‘அனல் மேலே பனித்துளி’ திரைப்படம் நவம்பர் 18-ஆம் தேதி நேரடியாக OTT-ல் வெளியாக உள்ளது. கெய்சர் ஆனந்த் இயக்கியுள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயண் இசையமைத்துள்ளார்.

    இதற்கிடையே அனல் மேலே பனித்துளி படத்தின் புரொமோஷனுக்காக நேர்க்காணல் ஒன்றில் கலந்துக் கொண்ட ஆண்ட்ரியா, “20-களில் இருந்த போது 30 வயதில் திருமணம் செய்யனுமே, ஆனால் நாம் இன்னும் யாரையும் சந்திக்கவில்லையே என்ற அழுத்தம் தனக்கு இருந்தாகக் குறிப்பிட்டார். மேலும் தொடர்ந்த அவர், திருமணம் ஆன பிறகும் பலர் மகிழ்ச்சியாக இல்லை என்றும், அதேபோன்று பலர் திருமணம் செய்து கொள்ளாமல் இன்னும் மகிழ்ச்சியாக வாழ்வதாகவும் தெரிவித்தார்.

    தங்கையின் பாசாங்கு இல்லாத நடிப்பு... குஷி கபூரை புகழ்ந்த ஜான்வி கபூர்!

    தனது திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்று தனக்கு எதுவும் தெரியாது என்றும், எதுவாக இருந்தாலும் தன் மகிழ்ச்சிக்கு தானே பொறுப்பு என்றும் கூறினார். திருமணம் செய்து கொண்டால் மட்டுமே ஒருவர் மகிழ்ச்சியாக இருப்பார் என்பதில் உண்மையில்லை என்றும் விளக்கினார் ஆண்ட்ரியா.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Published by:Shalini C
    First published:

    Tags: Andrea Jeramiah