Home /News /entertainment /

ஃபேண்டஸி திரைப்படத்தில் தேவதையாக நடிக்கும் ஆண்ட்ரியா!

ஃபேண்டஸி திரைப்படத்தில் தேவதையாக நடிக்கும் ஆண்ட்ரியா!

ஆண்ட்ரியா

ஆண்ட்ரியா

ஆண்ட்ரியாவுடன் சுனைனா, முனிஷ்காந்த் ஆகியோர் நடிக்கின்றனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிந்துமாதவி இந்தப் படத்தில் முக்கியமான வேடம் ஏற்றுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
நடிகை ஆண்ட்ரியா முதல்முறையாக ஒரு படத்தில் தேவதையாக நடிக்கிறார். இதுவொரு ஃபேண்டஸி திரைப்படம்.

வெளிநாடுகளில் தேவதைக் கதைகள் வருடத்துக்கு ஒரு டஜனாவது படமாகும். இந்தியாவில் அப்படியான ஃபேரிடெயில்கள் அதிகம் இல்லை. சினிமாவில் சுத்தமாக இல்லை என்றே சொல்லலாம். தமிழ் சினிமாவில் முதல்முறையாக அப்படியொரு ஃபேண்டஸி தேவதை கதை படமாகிறது. அதில் ஆண்ட்ரியா தேவதையாக நடிக்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை துப்பாக்கி முனை படத்தை இயக்கிய தினேஷ் செல்வராஜ் இயக்கி வருகிறார். ஆண்ட்ரியாவுடன் சுனைனா, முனிஷ்காந்த் ஆகியோர் நடிக்கின்றனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிந்துமாதவி இந்தப் படத்தில் முக்கியமான வேடம் ஏற்றுள்ளார். சென்னையில் பிரமாண்ட அரங்கு அமைத்து படப்பிடிப்புபை நடத்தி வருகின்றனர். தேவதை கதையில் குழந்தைகள் இல்லாமலா? சுமார் நான்கு டஜன் குழந்தை நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்து வருகிறார்கள்.

தினேஷ் செல்வராஜ் தனது துப்பாக்கி முனை படத்தை தூத்துக்குடி, ராமேஸ்வரம் கடற்கரைப் பகுதிகளில் தான் பெரும்பாலும் படமாக்கினார். இந்த ஃபேண்டஸி படத்தின் முக்கியமான காட்சிகளையும் தூத்துக்குடியில் படமாக்க உள்ளார். சுப்பிரமணியெம் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். 2022 மத்தியில் படத்தை வெளியிடும் திட்டத்துடன் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.

Andrea Jeremiah plays the angel in the fantasy movie, Andrea Jeremiah, actress andrea jeremiah, actress andrea, ஆண்ட்ரியா, ஆண்ட்ரியா ஜெரேமியா, andrea jeremiah husband name, andrea jeremiah instagram, andrea jeremiah twitter, andrea jeremiah family, andrea jeremiah fb, andrea age, andrea husband, andrea fantasy movie, ஆண்ட்ரியா தேவதை, தேவதையாக நடிக்கும் ஆண்ட்ரியா

இதையும் படிங்க - நடிகை மீனாவின் மொத்த குடும்பத்துக்கும் கொரோனா

இதில் தேவதையாக நடித்துவரும் ஆன்ட்ரியா, மிஷ்கினின் பிசாசு 2 படத்தில்  பிசாசாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Andrea Jeramiah, Tamil Cinema

அடுத்த செய்தி