Code Red - விக்ரம் படத்தில் நடிப்பதை பூடகமாக அறிவித்த ஆன்ட்ரியா

ஆண்ட்ரியா

இதற்குமுன் உத்தம வில்லன், விஸ்வரூபம், விஸ்வரூபம் 2 ஆகிய படங்களில் ஆன்ட்ரியா கமலுடன் நடித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கமலின் விக்ரம் படத்தில் ஆன்ட்ரியா நடிக்கிறார் என்ற செய்தி இரண்டு நாளாக உலவிக் கொண்டிருக்கிறது. படக்குழு அதிகாரப்பூர்வமாக அதனை அறிவிக்காத நிலையில், கோட் ரெட் என்ற பூடக வார்த்தை மூலம் விக்ரம் படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார் ஆன்ட்ரியா.

ஆன்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிவப்பு நிற கோட் அணிந்த புகைப்படத்தை கோட் ரெட் என்ற குறிப்புடன் வெளியிட்டிருந்தார். அதே கோட் ரெட் வாசகத்துடன் கமலின் விக்ரம் போஸ்டர் வெளியாகியுள்ளது.



ஒன்றும் ஒன்றும் இரண்டு என்ற கணக்கின்படி, விக்ரம் படத்தில் நடிப்பதையே இப்படி பூடகமாக ஆன்ட்ரியா தெரியப்படுத்தியுள்ளார் என்ற முடிவுக்கு ரசிகர்கள் வந்துள்ளனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தற்போது ஆன்ட்ரியா பிசாசு 2 படத்தில் மிஷ்கின் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் அவர்தான் பிரதான வேடம் ஏற்றுள்ளார்.



ஆகஸ்ட் 18 ஆம் தேதியுடன் பிசாசு 2 இன் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க மிஷ்கின் திட்டமிட்டுள்ளார். அதன் பிறகு ஆன்ட்ரியா விக்ரம் படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது



Also read... ஒத்த செருப்பு இந்தியில் ரீமேக் - ஹீரோ யார் தெரியுமா?

இதற்குமுன் உத்தம வில்லன், விஸ்வரூபம், விஸ்வரூபம் 2 ஆகிய படங்களில் ஆன்ட்ரியா கமலுடன் நடித்துள்ளார்.



விக்ரம் படத்தில் அவர் நடிப்புது உண்மையானால் இது கமலுடன் அவர் பணிபுரியும் நான்காவது படமாக இருக்கும்.
Published by:Vinothini Aandisamy
First published: