பிசாசு-2 படத்துக்காக ஆண்ட்ரியா எடுத்த ரிஸ்க்.. கோடிகளில் சம்பளமாம்

நடிகை ஆண்ட்ரியா ( Image : Instagram @therealandreajeremiah)

ஆண்ட்ரியா இந்த படம் மூலம் தனது சம்பளத்தை கோடிகளில் உயர்த்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 • Share this:
  தமிழ் திரையுலகில் பின்னணி பாடகியாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா. இசை, நடிப்பு, டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என தமிழ் திரையுலகில் வட்டமடிக்கிறார். வெரைட்டியான ரோல்கள் மூலம் நடிப்பிலும் முத்திரை பதிக்கிறார் ஆண்ட்ரியா. மங்காத்தா, விஸ்வரூபம், அரண்மனை, வடசென்னை, தரமணி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக விஜய் - விஜய் சேதுபதி காம்போவில் வெளியான மாஸ்டர் படத்தில் இவர் நடித்திருந்தார்.

  ஆண்ட்ரியா தற்போது மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு- 2 படத்தில் நடித்து வருகிறார். 2016-ல் வெளியான பிசாசு படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ் சினிமாவில் வழக்கமாக இருக்கும் பேய் படங்களுக்கான எலிமெண்டை தூக்கி ஓரமாக வைத்தார் மிஷ்கின். மரண ஓலங்களை எழுப்பி குரூரமாக வரும் பேய்களுக்கு தன்னுடைய ஸ்க்ரிப்டில் இடம் கொடுக்கவில்லை. பிசாசை தேவதையைப் போல் காட்டியிருந்தார். பிசாசுவில் பேயை காதலிக்க வைத்தார் மிஷ்கின். இந்தப் படம் வசூல் ரீதியாகவும்  வெற்றிப்பெற்றது.|

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதனையடுத்து தற்போது பிசாசு-2 வேலைகளில் பிஸியாகிவிட்டார் மிஷ்கின். இதில் ஆண்ட்ரியா ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா நிர்வாணமாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.. கதைக்கு இந்த காட்சி மிகவும் அவசியம் என்பதால் ஆண்ட்ரியா நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம். இதுவரை லட்சங்களில் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த ஆண்ட்ரியா இந்த படம் மூலம் தனது சம்பளத்தை கோடிகளில் உயர்த்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: