Home /News /entertainment /

ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ராமா ராவ் மகள் தூக்கிட்டு தற்கொலை…

ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ராமா ராவ் மகள் தூக்கிட்டு தற்கொலை…

என்.டி.ஆர்.மகள் உமா மகேஸ்வரி

என்.டி.ஆர்.மகள் உமா மகேஸ்வரி

என்.டி.ராமா ராவின் மகள் உமா மகேஸ்வரி நீண்ட கால வியாதிகளால் பாதிக்கப்பட்டதால், கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

    ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி. ராமா ராவின் 4வது மகள் உமா மகேஷ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

    ஆந்திர திரையுலகில் சூப்பர் ஸ்டாராகவும், மாநில முதல்வராகவும் பொறுப்பில் இருந்தவர் என்.டி. ராமாராவ். இவரது, 4-வது மகள் உமா மகேஸ்வரி இன்று ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    நீண்ட கால வியாதிகளால் பாதிக்கப்பட்டிருக்கும் அவர் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

    வாங்கோ வாங்கோ ஒண்ணாகி... என்ஜாய் எஞ்சாமி சர்ச்சைக்கு சந்தோஷ் நாராயணன் விளக்கம்!

    இந்த நிலையில் இன்று வீட்டின் படுக்க அறையில் உள்ள ஃபேனுக்கு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரமாக படுக்கை அறையில் இருந்து உமா மகேஸ்வரி வெளியே வராததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர், கதவை உடைத்து பார்த்த போது அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    குடும்ப உறுப்பினர்கள் அளித்த  புகாரின் பேரில் விரைந்து சென்ற போலீசார் உமா மகேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

    செந்திலுக்கு காத்திருக்கும் சிக்கல் - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

    மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
    Published by:Musthak
    First published:

    Tags: Tollywood

    அடுத்த செய்தி