அப்பா இயக்கத்தில் 'அந்தகன்' படத்தில் நடிக்கும் பிரசாந்த் - படப்பிடிப்பு தொடக்கம்

அப்பா இயக்கத்தில் 'அந்தகன்' படத்தில் நடிக்கும் பிரசாந்த் - படப்பிடிப்பு தொடக்கம்

அந்தகன் படக்குழு

அந்தாதுன் தமிழ் ரீமேக்காக உருவாகும் அந்தகன் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது

  • Share this:
இந்தியில் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான படம் அந்தாதுன். ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் ஆயுஷ்மன் குரானா, ராதிகா ஆப்தே, தபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். வசூலை வாரிக்குவித்த இத்திரைப்படம் 3 தேசிய விருதுகளைப் பெற்றது.

இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையைப் பெற முன்னணி நடிகர்கள் பலர் முயன்ற நிலையில், நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் அதை பெரும் தொகை கொடுத்து வாங்கினார். இதையடுத்து 2020-ம் ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி தமிழ் ரீமேக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதில், ஜெ.ஜெ.பெட்ரிக் இத்திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும் சந்தோஷ் சிவன் இசையமைப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னர் ஜனவரி மாதத்தில் ‘அந்தகன்’என்று படத்தின் டைட்டிலை அறிவித்த படக்குழு விரைவில் ஷூட்டிங் தொடங்கப்படும் என்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போது ஜே.ஜே.பெட்ரிக் மாற்றப்பட்டு பிரசாந்தின் தந்தையே இயக்குவார் என்றும் இன்று முதல் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. இதுகுறித்து இன்று படக்குழு வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் சந்தோஷ் நாராயணனின் பெயர் இடம்பெறவில்லை. எனவே இசையமைப்பாளரும் மாற்றப்பட்டுள்ளாரா என்ற கேள்வி எழுகிறது.

இத்திரைப்படத்தில் பிரசாந்த் உடன் சிம்ரன் இணைந்து நடிக்கிறார். கண்ணெதிரே தோன்றினாள், ஜோடி, தமிழ் ஆகிய படங்களில் நடித்திருந்த பிரசாந்த் - சிம்ரன் ஜோடி அந்தகன் படத்தில் இணைந்துள்ளது. இவர்களுடன் கார்த்திக், யோகி பாபு, ஊர்வசி, கே.எஸ்.ரவிக்குமார், மனோபாலா, வனிதா விஜயகுமார், லீனா சாம்சன், செம்மலர், பூவையார் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
Published by:Sheik Hanifah
First published: