டிஜிட்டல் தளங்களில் நேரடியாக வெளியாகும் வா டீல், அண்டாவ காணோம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

வா டீல், அண்டாவ காணோம் ஆகிய படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே அறிவித்துள்ளார்.

டிஜிட்டல் தளங்களில் நேரடியாக வெளியாகும் வா டீல், அண்டாவ காணோம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
வா டீல், அண்டாவ காணோம்
  • Share this:
நீண்ட நாள் ரிலீசாகாமல் இருந்து வந்த வா டீல் திரைப்படம் விரைவில் ஓடிடி தளத்தில் ரிலீசாக இருக்கிறது. ரத்ன சிவா இயக்கத்தில் அருண் விஜய், கார்த்திகா உள்ளிட்ட பலர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
அதேபோல் ஸ்ரேயா ரெட்டி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அண்டாவ காணோம் திரைப்படமும் விரைவில் ஓடிடி தளத்தில் ரிலீசாக இருக்கிறது.

கொரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் இன்னும் திறக்கப்படவில்லை. இதனால் ரிலீசுக்கு தயாரான படங்களைக் கைப்பற்றி வரும் ஓடிடி நிறுவனங்கள் அடுத்தடுத்து படங்களை ரிலீஸ் செய்து வருகின்றன.


ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் திரைப்படத்தை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள பெண்குயின் திரைப்படம் ஜூன் 19-ம் தேதி ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில் நீண்ட நாள் ரிலீசாகாமல் இருந்து வந்த வா டீல் திரைப்படம் விரைவில் ஓடிடி தளத்தில் ரிலீசாக இருக்கிறது. ரத்ன சிவா இயக்கத்தில் அருண் விஜய், கார்த்திகா உள்ளிட்ட பலர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
அதேபோல் ஸ்ரேயா ரெட்டி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அண்டாவ காணோம் திரைப்படமும் விரைவில் ஓடிடி தளத்தில் ரிலீசாக இருக்கிறது.

இந்த இரண்டு படங்களின் உரிமையை வைத்திருக்கும் தயாரிப்பாளர் கே.எஸ்.கே இத்தகவலை தனது சமூகவலைதள பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். அவர்து பதிவில் கூறப்பட்டிருப்பவதாவது, "ஜே.எஸ்.கே ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் படங்களான அண்டாவ காணோம், வா டீல், மம்மி சேவ் மீ ஆகியவை விரைவில் ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன. மேலும் 3 படங்களைத் தயாரிக்க உள்ளோம். விரைவில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். உங்களது ஆதரவு தேவை” என்று கூறப்பட்டுள்ளது.


மேலும் படிக்க: தேவர் மகன் பட ஸ்கிரிப்ட்டை ஒரே வாரத்தில் எழுதி முடித்த கமல்ஹாசன்








First published: June 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading