முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / நக்மா முதல் நமீதா வரை... அப்பா சரத்குமாருக்கு கலகல முன்னுரை.. விழுந்து விழுந்து சிரித்த மகள் வரலட்சுமி!

நக்மா முதல் நமீதா வரை... அப்பா சரத்குமாருக்கு கலகல முன்னுரை.. விழுந்து விழுந்து சிரித்த மகள் வரலட்சுமி!

சரத்குமார், வரலட்சுமி,

சரத்குமார், வரலட்சுமி,

நிகழ்வில் நடிகர் சரத்குமார் பற்றி தொகுப்பாளர் நக்மா முதல் நமீதா வரை என அறிமுக உரை கூறிய போது மேடையில் இருந்த அவரின் மகள் வரலட்சுமி விழுந்து விழுந்து சிரித்துள்ளார்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

கொன்றால் பாவம் படத்தின் நிகழ்வில் நடிகர் சரத்குமார் பற்றி தொகுப்பாளர் நக்மா முதல் நமீதா வரை என அறிமுக உரை கூறிய போது மேடையில் இருந்த அவரின் மகள் வரலட்சுமி விழுந்து விழுந்து சிரித்துள்ளார்.

வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் பிரபல கன்னட இயக்குனர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் 'கொன்றால் பாவம்' என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. ஆசையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார் உடன் சந்தோஷ் பிரதாப்,  சார்லி, இயக்குனர் சுப்ரமணிய சிவா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.இந்த திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் நடிகர் சரத்குமார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.  அந்த படத்தின் டிரைலரை  சரத்குமார் வெளியிட்டார்.

அதனை தொடர்ந்து மேடையில் 'கொன்றால் பாவம்' படத்தின் நாயகி வரலட்சுமி சரத்குமார் பேசுகையில்,  படக்குழுவினரின் ஒவ்வொருவரின் செயல்பாடுகளையும் குறிப்பிட்டு பாராட்டினார். அதில் இயபணியாற்றினார். பத்மநாபன் சிறந்த முறையில் பணியாற்றினார். இந்த திரைப்படத்தை 14 நாட்களில் படமாக்கி முடித்து விட்டோம்.  இதற்குப் பிறகு மீண்டும் ஒரு திரைப்படத்தில் அவருடைய இயக்கத்தில் நடித்து முடித்து இருக்கிறேன்.  அந்த அளவுக்கு சிறப்பாக பணியாற்றக் கூடியவர் என கூறினார்.

தொடந்து நாயகன் சந்தோஷ் பிரதாப் பேசுகையில் நான் நிறைய படங்களில் நடித்து வருகிறேன், சில படங்களில் நடிக்கும் போது அந்த படத்தின் நடிகர்கள் என்னை ஒரு நடிகராகவே மதிக்க மாட்டார்கள். ஆனால் இந்த படத்தில் நடித்த வரலட்சுமி சரத்குமார் மிகவும் சகஜமாக பழகியது மகிழ்ச்சி அளித்ததாக கூறினார். கொன்றால் பாவம் நிச்சயம் நல்ல திரைப்படமாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

மேலும் இந்த நிகழ்வில் நடிகர் சரத்குமாரை பேசுவதற்கு அழைப்பதற்கு முன் அவரைப் பற்றி தொகுப்பாளர் நக்மா முதல் நமீதா வரை என அறிமுக உரை கூறிய போது மேடையில் இருந்த அவரின் மகள் வரலட்சுமி விழுந்து விழுந்து சிரித்துள்ளார். தொடர்ந்து கொன்றால் பாவம் படம் வரும் 10-ம் தேதி வெளியாகவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor varalakshmi, Sarathkumar